நாம் குறிப்பிட்ட ஒரு தளத்தில் பல்வேறு நோக்கங்கள் கருதி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்துவதுண்டு என்றாலும் குறிப்பிட்ட தளத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் ஒரே உலாவியின் மூலம்  பயன்படுத்த முடிவதில்லை மாறாக ஒரு கணக்கை மாத்திரமே பயன்படுத்த முடியும் அவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனின் குறிப்பிட்ட கணக்கிலிருந்து வெளியேறி மற்றைய கனன்க்குக்குள் உட்புக வேண்டும். இது சற்று சிரமமான காரியம் அல்லவா? 

இந்த பிரச்சினைக்கு Google Chrome உலாவியிலேயே தீர்வு இருக்கின்றது.
இதனை நீங்களும் பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.


Google Chrome இணைய உலாவியின் வலது மூலையில் இருக்கும் Customize அடையாளத்தினை சுட்டி Settingsபகுதிக்கு செல்லுங்கள்.பின் அதில் Users என்பதற்கு கீழிருக்கும் Add User என்பதனை சுட்டுக பின் படத்திலிருப்பதை போன்ற சாளரம் ஒன்றை அவதானிப்பீர்கள். அதில் Name என்பதில் குறிப்பிட்ட கணக்குக்கான ஒரு பெயரை இடுக பின் குறிப்பிட்ட கணக்கை இலகுவில் அடையாளம் கண்டு கொள்வதற்காக தப்பட்டிருக்கும் படங்களில் உங்களுக்கு விரும்பியதொன்றை தெரிவு செய்த பின் Create என்பதனை அலுத்துக அவ்வளவுதான். இனி நீங்கள் இட்ட பெயரில் புதியதொரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கும்.
இது போன்று ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனை கணக்குகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு நீங்கள் உருவாக்கிய ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை Google Chrome இணைய உலாவியின் வலது மேல் மூலையில் நீங்கள் இட்ட படத்துடன் (Icon) காணலாம்.
உதாரணமாக நீங்கள் முதலில் உருவாக்கிய கணக்கின் பெயர் A என்றும் அடுத்து உருவாக்கும் கணக்கு B என்றும் எடுத்துக்கொண்டால் A எனும் பயனர் கணக்கு மூலம் A இற்கான முகநூல் கணக்கு, Twitter, Yahoo போன்றவற்றினை தனியாக பயன்படுத்தலாம். பின் B பயனர்கணக்கு மூலம் B இற்கான முகநூல் கணக்கு, Twitter, Yahoo போன்றவற்றினை தனியாக பயன்படுத்தலாம். இந்த வசதி Firefox இணைய உலாவியில் இல்லை என்றாலும் CookieSwap எனும் நீட்சியை அதற்கு நிறுவுவதன் மூலம் சாத்தியமாக்கலாம்.நீங்கள் Firefox இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட நீட்சியை கீழுள்ள இணைப்பில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.இந்த பதிவு தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் கீழிருக்கும் கருத்துரை பெட்டியில் தெரிவிக்கவும்.

Love to hear what you think!

2 comments:

 1. அருமையான பதிவு தெரிந்து கொண்டேன்

  என்னுடைய தளம் www.itjayaprakash.blogspot.in

  பதிலளிநீக்கு
 2. பெரிய தலைப்பு
  பொறியியல் Shoubra ஆசிரிய
  http://www.feng.bu.edu.eg

  பதிலளிநீக்கு

 
Top