கணினி பயன்படுத்துபவர்களில் Microsoft Office பயன்படுத்தாதவர்கள் யார் தான் இருக்க முடியும். நாம் எமக்குத் தேவையான ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கு நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு மென்பொருள் என்றால் அது Microsoft Office ஆகத் தான் இருக்கும். 

மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு (Microsoft Word)


எனவே இதனை நாம் அன்றாடம் அல்லது அடிக்கடி பயன்படுத்தினாலும் ஆவணங்களை மிக இலகுவில் தயாரித்துக் கொள்வதற்காக இதனுள் தரத்தப்பட்டிருக்கும் சில வசதிகளை நம்மில் அதிகமானோர் அறிந்ததில்லை.

எனவே அவ்வாறு மைக்ரோசாப்ட் வேர்ட் இல் தரப்படும் சில வசதிகளை கீழே காணலாம்.  • Microsoft Word இல் ஓர் பந்தியை மிக வேகமாக அமைத்துக் கொள்வதற்கு =rand() என தட்டச்சு செய்து Enter அலுத்துக. அல்லது  =lorem() எனவும் தட்டச்சு செய்யலாம். மேலும் தரப்படும் 3 பந்திகளுக்கு மேல் தேவைப் படின் =rand(5,6) என தட்டச்சு செய்யலாம் இதில் 5 என்பது 5 பந்திகள் என்பதனையும் 6 என்பது 6 வரிகளையும் குறிக்கும் இவற்றினை உங்கள் தேவைக்கு ஏற்றாட் போல் மாற்றிக் கொள்ளலாம்.

=rand()


  • குறிப்பிட்ட ஒரு பந்தியில் இருக்கும் ஒரு சில சொற்களை மட்டும் மேலிருந்து கீழாக  தெரிவு செய்ய ALT Key யுடன் குறிப்பிட்ட எழுத்துக்களை மேலிருந்து கீழாக தெரிவு செய்யவும்.

ALT for ms word
  • உங்கள் ஆவணத்தில் Cut செய்து Past செய்ய ஏராளமான சொற்கள் இருப்பின் அவைகள் ஒவ்வொன்றாக Cut செய்து Past செய்ய வேண்டுமல்லவா? இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு Cut செய்ய வேண்டிய சொல்லை ஒவ்வொன்றாக தெரிவு செய்து Ctrl+F3 இனை அலுத்துக பின் அவற்றினை Past செய்ய வேண்டிய இடத்தில் Ctrl+Shift+F3 இனை அலுத்துக இனி அவை ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் Past செய்யப்பட்டு விடும்.

Microsoft word


  • நீண்ட ஒரு ஆவணத்தை நீங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் இறுதியாக மாற்றம் செய்த இடத்தினை மறந்து விட்டீர்களா? அப்படியாயின்  Shift+F5 இனை அலுத்துக நீங்கள் இறுதியாக மாற்றம் செய்த இடத்திற்கு Cursor நகரும். இவ்விரண்டு விசைகளையும் விட்டு விட்டு அழுத்தும் போது இறுதியாக மாற்றம் செய்த இடம் ஒவ்வன்றாக காணலாம்.

  • பொதுவாக ஆங்கில எழுத்துக்களில் ஆவணங்களை தயாரிக்கும் போது Simple Letter இலிருந்து Capital Letter இற்கும்  Capital Letter இலிருந்து Simple Letter இற்கும் மாற்ற குறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்றொடரை தெரிவு செய்து Shift+F3 இனை அலுத்துக.

word tips and tricks  • ஆவணத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு இடத்திலும் தட்டச்சு செய்ய குறிப்பிட்ட இடத்தில் Double Click செய்க.

தகவல் தொழில்நுட்பம்


  • ஆவணத்தில் குறிப்பிட்ட எழுத்துக்களுக்கு கொடுக்கப்பட்ட மாற்றங்களை நீக்கி அதன் உண்மையான தோற்றத்திற்கு கொண்டுவர Ctrl+Space Bar இனை அலுத்துக.

plain text in microsoft word

  • பொதுவாக நாம் சொற்களை Cut Past செய்வதற்கு Ctrl-x Ctrl-v விசைகளை பயன்படுத்துவதுண்டு ஆனால் Microsoft Word இல் இதற்கு இன்னுமொரு வழியும் உண்டு இதற்கு குறிப்பிட்ட சொல்லை தெரிவு செய்து F2 இனை அலுத்துக பின் Past செய்ய வேண்டிய இடத்தில் Cursor ஐ வைத்து Enter அலுத்துக இனி குறிப்பிட்ட சொல் Past செய்யப்பட்டு விடும்.

Love to hear what you think!

1 comments:

 
Top