இன்று Mobile Phone யுகம் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு மிக வேகமாக வளர்ந்து விட்டது. ஆரம்பத்தில் அழைப்புக்களை மட்டுமே மேற்கொள்வதற்கு பயன்படுத்திய Mobile Phone ஆனது இன்று வீட்டிலிருந்தே உலகத்தை உலகத்தை பார்ப்பதற்கும் உதவுகின்றது என்றால் மிகையாகாது.

இன்று Nokia நிறுவனம் பின் தள்ளப்பட்டிருந்தாலும் 2000-2010 காலப்பகுதியில் தனது உற்பத்திகளை மிக வேகமாக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் வாடிக்கையாளர்களிடம் சிறந்த நன்மதிப்பை பெறுவதிலும் முதலிடமாக காணப்பட்டது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எது எப்படியோ உலகில் அதி கூடிய விற்பனைகளை இது வரை பதிவு செய்திருக்கும் Mobile Phone, Nokia 1100 ஆகும் இது தவிர விற்பனையில் சிறந்த இடங்களை பிடித்த ஏனைய Mobile Phone களை கீழே காணலாம்.
 • வரலாற்றில் 250 மில்லியன் அலகுகள் விற்றுத் தீர்க்கப்பட்டு அதிகூடிய விற்பனைகளை பதிவு செய்துள்ள Mobile Phone, Nokia 1100 ஆகும்.
 • இது 2003 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
1100

 • இதற்கு அடுத்த படியாக Nokia 3210 எனும் Mobile Phone விற்பனையில் சாதனை படைத்தது. இது 160 மில்லியன் விற்பனை அலகுகளை பதிவு செய்திருந்தது.

3210
 • பின் 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Nokia 1110 எனும் Mobile Phone இன் 150 மில்லியன் விற்பனை அலகுகள்பதிவு செய்யப்பட்டது.

1110
 • அதி கூடிய விற்பனைகள் இடம்பெற்ற Mobile Phone களில் நான்காவதாக Nokia 1200 இனை குறிப்பிடலாம் இதுவும் 150 மில்லியன் அலகுகள் விற்றுத் தீர்க்கப்பட்டது.

1200
 • அடுத்து Nokia 6600 எனும் Mobile Phone இன் 150 மில்லியன் அலகுகள் விற்பனை செய்யப்பட்டது. இது  2003 இல்அறிமுகம் செய்யப் பட்டதாகும்.

6600
 • பின் Nokia 2600 (2610/2626/2630) போன்றவைகளின் 135 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டுள்ளது.  இவைகள் 2004 ஆம் இல்அறிமுகம் செய்யப் பட்டவைகளாகும். 

2600
 • இதற்கு அடுத்தபடியாக Motorola RAZR V3 இனை குறிப்பிடலாம் 2004 ஆம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இது 130 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டது.

RAZR V3
 • அடுத்து 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Nokia 1600 (1650/1661) போன்றவைகள் மொத்தம் 130 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டது.

1600
 • பிறகு 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்ட Nokia 3310 (3330) இனை குறிப்பிடலாம். இது 126 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டிருன்தது. (சமூக வலைதளங்களில் இது இன்று வரை பெருமை பேசப்படக்கூடிய ஒரு Mobile ஆக இருக்கின்றது)

3310
 • அடுத்ததாக 2007 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Nokia 1208 (1209) எனும் Mobile Phone 100 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டிருந்தது.
1208

இந்த கால கட்டங்களில் Nokia நிறுவனம் நினைத்துக் கூட பார்த்திருக்காது நாம் எதிர்காலத்தில் பின் தள்ளப்படுவோம் என்று. எது எப்படியோ இன்றைய Mobile உலகில் ஜாம்பவானாக திகழும் Apple மற்றும் Samsung போன்றன எதிர்காலத்தில் என்னென்ன சரித்திரங்கள் படைக்க இருக்கின்றன என்று பொறுத்திருந்து பாப்போம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top