குறிப்பிட்ட ஏதாவது ஒரு கோப்பை Copy Past செய்வதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நாம் Windows கணினியில் தரப்பட்டிருக்கும் Right Cick செய்து பெறப்படும் Send to எனும் வசதியினை அடிக்கடி பயன்படுத்துவோம் அல்லவா?

 பொதுவாக விண்டோஸ் கணினியில் Send to எனும் பகுதியில் Compress (Zipped) Folder, Create Shortcut, Documents, Fax Recipient, Mail Recipient, CC/DVD Drive என்பன தரப்பட்டிருக்கும். என்றாலும் இந்த Send to பகுதியில் நீங்கள் விரும்பும் ஒரு Shortcut இனை சேர்கவோ அல்லது அகற்றிக்கொள்ளவோ முடியும் இதற்கு கீழ் தரப்பட்டிருக்கும்  முறையினை பின்பற்றுக.1. முதலில் நீங்கள் சேர்க்க விரும்பும் கோப்பின் அல்லது மென்பொருளின் Shortcut இனை உருவாக்கிக் கொள்க
  • உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு கோப்புக்கு Shortcut இணை உருவாக்க வேண்டுமெனின் குறிப்பிட்ட கோப்பின் மேல் Right Click செய்து Send To என்பதிலிருக்கும் Desktop (Create Shortcut) என்பதனை அலுத்துக இனி குறிப்பிட்ட கோப்பிற்கான Shortcut, Desktop இல் உருவாகியிருப்பதனை அவதானிப்பீர்கள்.
Shortcut

  • அல்லது குறிப்பிட்ட ஒரு மென்பொருளுக்கு Shortcut இணை உருவாக்க வேண்டுமெனின் Desktop இல் Right Click செய்து New என்பதினூடாக Shortcut என்பதனை தெரிவு செய்து உங்களுக்குத் தேவையான மென்பொருளின் Shortcut இணை உருவாக்கிக் கொள்க

கணணி உபாயங்கள்


2. பின் உங்கள் கணனியில் Run Program இனை திறந்து shell:sendto என தட்டச்சு செய்து Ok அலுத்துக


Run Send to


3. இனி Send to எனும் கோப்பு திறக்கும் பிறகு Send to என்பதனுள் நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய கோப்பின் அல்லது மென்பொருளின் Shortcut இனை Past செய்க.

அவ்வளவு தான் இனி Right Click செய்து Send to என்பதில் சுட்டியை வைத்துப் பாருங்கள் நீங்கள் இணைத்த அந்த புதிய Shortcut தோன்றுவதை அவதானிக்கலாம்.

தொழில்நுட்ப தகவல்


உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top