நாம் தேடல் என வரும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது Google தேடு பொறியையே ஆகும். என்றாலும் வீடியோ கோப்புக்களை தேடுவதற்கு Google ஐ விட சிறந்த முடிவுகளை  Bing தேடியந்திரம் தருகிறது.

Goolge இல் ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தேடும் போது அது அதிகமான முடிவுகளை YouTube தளத்திலிருந்தே காட்டும். என்றாலும் Bing தேடியந்திரமானது YouTube உட்பட Dailymotin, Vimeo, Metacafe, Hulu என 10 க்கும் அதிகமான சிறந்த தளங்களிலிருந்து முடிவுகளை தருகின்றது.


அத்துடன் Resolution என்பதன் மூலம் நீங்கள் தேடும் வீடியோ கோப்பின் தரத்தினை வேறுபிரித்தும் முடிவுகளை பெற வழிவகுக்கின்றது.

மேலும் Length எனும் வசதி மூலம் நீங்கள் தேடும் வீடியோ கோப்பு எவ்வளவு நேரம் இயங்கவேண்டியது என்பதனை தனியாக தேடி முடிவுகளை பெறலாம்.

இவைகள் தவிர பெறப்படும் முடிவின் மேல் சுட்டியை வைக்கையில் குறிப்பிட்ட விடியோ முடிவானது Popup ஆக தோன்றி இயங்கக்கூடிய அருமையான வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ இனை பார்க்க அதன் தளத்திற்கே செல்லவேண்டிய அவசியமிருக்காது.

இந்த வசதிகள் ஏற்கனவே தரப்பட்டிருந்தாலும் இவற்றினை இலகுவில் பயன்படுத்திக் கொள்வதற்கான புதிய இடைமுகம் அமெரிக்காவில் மாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

என்றாலும் Bing தளத்தில் சிறிய ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் உலகில் எந்த மூலையில் இருப்பவரும் இதன் புதிய தோற்றத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த மாற்றத்தினை செய்து நீங்களும் புதியதொரு அனுபவத்தினை பெற விரும்பின் 
  • முதலில் Bing தளத்துக்கு செல்லுங்கள் Bing Video Search
  • பின் வலது மூலையில் இருக்கும் Settings இற்கான Gear Icon ஐ சுட்டுக
  • இனி கிடைக்கும் பக்கத்தில் Location என்பதற்கு கீழ் change your country/region என்பதனை சுட்டுக அல்லது WORLDWIDE என்பதனை சுட்டுக.

bing location

  • பின் அங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளில் United-State-English என்பதனை தெரிவு செய்க 


அவ்வளவுதான் .......! இனி Bing இல் வீடியோ தேடலின் போது புதிய தோற்றத்தினை உணருருவீர்கள்.

மாற்றத்திற்கு முன் 

bing தேடியந்திரம்

மாற்றத்திற்கு பின் 

bing


வருகைக்கு நன்றி !

Love to hear what you think!

1 comments:

 
Top