அன்றாடம் கணணி பயன்படுத்தும் நாம் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் சில மென்பொருள்களை சுலபமாக திறப்பதற்கு Run என்பதனை பயன்படுத்துகின்றோமல்லவா?

இது போன்று Windows கணனியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் என ஒவ்வொரு Run Commands தரப்பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தையும் ஞாபகத்தில் வைப்பதென்பது சற்று சிரமமான காரியமே எனவே சிறியதொரு உபாயத்தை பயன்படுத்தி Windows கணனியில் நிறுவப்படும் எந்த ஒரு மென்பொருளுக்கும் எமக்கு இலகுவில் ஞாபகம் வைக்கக் கூடிய Run கட்டளைகளை கொடுக்க முடியும்.


உதாரணத்திற்கு கணனியில் நிறுவப்பட்டுள்ள Firefox இணைய உலாவியை Run கட்டளை மூலம் திறக்க வேண்டுமெனின் firefox என Run இல் தட்டச்சு செய்ய வேண்டும் என்றாலும் firefox எனும் கட்டளைக்கு பதிலாக Fx என்றோ அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதும் கட்டளைகள் மூலமோ  Firefox இணைய உலாவியை திறந்து கொள்ள முடியும்.

இதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றுக

Desktop இல் Right Click செய்து New ====> Shortcut என்பதனை சுட்டுக.


Desktop New Shortcut


இனி பெறப்படும் Window இல் Browse என்பதன் ஊடாக குறிப்பிட்ட மென்பொருளுக்கான .exe கோப்பினை  தெரிவு செய்க.
(உதாரணத்திற்கு Firefox இன் .exe கோப்பினை  தெரிவு செய்ய "C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" இற்கு செல்ல வேண்டும். Windows கணனியில் நிறுவப்படும் அனேக மென்பொருள்கள் C:\Program Files எனும் directory இலே பதியப்படுகின்றது)


சாளரம்


பிறகு Next என்பதை அழுத்த பெறப்படும் சாளரத்தில் Type Name For Shortcut எனுமிடத்தில் நீங்கள் இலகுவில் ஞாபகம் வைத்துகொள்ளகூடிய Run கட்டளையை தட்டச்சு செய்து Finish என்பதை அலுத்துக.

Create Shortcut Window


பின் உங்கள் கணனியின் திரையில் நீங்கள் இட்ட Run கட்டளையின் பெயரில் குறிப்பிட்ட மென்பொருளுக்கான Shortcut உருவாகியிருப்பதை அவதானிக்கலாம்.

பிறகு அதனை Cut செய்து C:\Windows என்பதில்  Past செய்க.


Firefox Shortcut


அவ்வளவுதான்......!


இனி Run சென்று நீங்கள் குறிப்பிட்ட மென்பொருளுக்கு இட்ட அந்த Run கட்டளையை தட்டச்சு செய்து Enter அழுத்தி பாருங்கள் குறிப்பிட்ட மென்பொருள் திறப்பதனை அவதானிப்பீர்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top