2004 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அதே தோற்றத்தில் Facebook தளம் இன்றும் இருந்திருப்பின் அதனால் இன்று இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்றிருக்க முடியாது என்பது தெளிவான உண்மையே.

எனவே அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதுடன் பல புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி தன்பால் வாசகர்களை கவர்வதுடன் இருக்கும் வாசகர்களை தக்க வைத்துக்கொள்வதும் Facebook இன் நீண்ட நாள் பயணத்துக்கான ஆதாரங்கலேயாகும்.


அந்த வகையில் Facebook ஆனது Embed Post எனும் இன்னுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முகநூலில் பகிரப்படும் எந்த ஒரு பதிவையும் இணையதளங்களை அல்லது வலைப்பூக்களை  நிருவகிப்பவர்கள் தமது தளங்களிலும் பகிர்ந்து கொள்வதற்கான வசதியே இதுவாகும்.

இதற்கு குறிப்பிட்ட பதிவின் வலதுபக்க மேல் மூலையில் தோன்றும் அம்புக்குறி அடையாளத்தினை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Embed Post என்பதனை சுட்டுக இதன் போது கிடைக்கும் Code இனை உங்கள் தளங்களில் இட்டு பகிர்ந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு கீழே உள்ள பதிவை பார்க்கவும் இது மேற்சொன்ன முறையில் பகிரப்பட்ட ஒரு முகநூல் பதிவாகும்.வருகைக்கு நன்றி.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top