நாம் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அழகிய இயற்கை காட்சிகள் போன்றவைகளை புகைப்படமாக எடுத்து இரசிக்கின்றோம் அல்லவா?

Caesium Image Compressor


இவற்றுக்காக நாம் பயன்படுத்தும் இன்றைய ஸ்மார்ட் போன் மற்றும் Digital Camera போன்ற நவீன சாதனங்கள் புகைப்படங்களை உச்ச தெளிவுத்திறனில் பெற்றுக் கொள்வதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்படுகின்றமை நாம் அறிந்த விடயமே.
இவ்வாறு உச்ச தெளிவுத்திறனில் பிடிக்கப்படும் புகைப்படங்கள் அளவில் பெரிதாகவே காணப்படுகின்றது உதாரணத்திற்கு நாம் 5 Mega Pixel திறனுடைய Camara மூலம் பிடிக்கும் படங்கள் 512 Kb அளவில் இருக்கும் அதே வேளை   குறிப்பிட்ட அதே படத்தை 8 Mega Pixel திறனுடைய Camara மூலம் பிடிக்கும் போது 1000 Kb ஆகவும் இருக்கலாம்.

எனவே இதுபோன்று அளவில் அதிகமான புகைப்படங்களை நாம் கணினியில் சேமிக்கும் போது கணனியின் நினைவகத்தில் அதிக இடத்தினை எடுத்துக் கொள்கிறது அதுமட்டுமல்லாது நாம் சமூக தளங்களில் அல்லது வேறு தளங்களில் தரவேற்றும் போது அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன் இணையத்தை பயன்படுத்துவதற்கான கட்டணமும் அதிகரிக்கலாம்.

இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது Caesium எனும் முற்றிலும் இலவசமான மென்பொருள். இது உங்கள் புகைப்படத்தின் தரத்தில் சற்றும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் குறிப்பிட்ட புகைப்படத்தின் அளவை 90% வரை குறைத்துத் தருகின்றது.


புகைப்படம் சுருக்கி


இது சிறியோர் முதல் பெரியோர் வரை மிக இலகுவில் பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒரே நேரத்தில் தெரிவு செய்து அதன் அளவுகளை சுருக்கிக் கொள்ள முடிகிறது.

தேவைப்படின் புகைப்படங்களின் நீளம் அகலம் போன்றவற்றினையும் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியுமுள்ளது.

இது எதிர்காலத்தில் Android மற்றும் iOS இயங்குதளங்களைக் கொண்ட Smart Phone களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எனவே அது தொடர்பான தகவல்களையும் அறிய தொடர்ந்தும் இணைந்திருங்கள் Tamilinfotech எனும் எமது முக நூல் பக்கத்தினூடாக.


இம் மென்பொருள் Portable பதிப்பாகவும் கணனியில் நிறுவி பயன்படுத்தும் பதிப்பாகவும் இரண்டு பதிப்புகளிலும் கிடைக்கின்றது நீங்கள் விரும்பியதை கீழுள்ள அதன் உத்தியோக பூர்வ பக்கத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

நன்றி 


உங்கள் கருத்துக்கள் எம்மை வளப்படுத்தும். உங்கள் பெறுமதியான கருத்துக்களை எதிர்பார்கின்றோம்.

நன்றி.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top