முகநூலில் உங்கள் பெயர் எப்படி இருக்கின்றது முதற்பெயர், இடைநிலைப்பெயர், இறுதிப்பெயர் அல்லது முதற்பெயர் இறுதிப்பெயர் என்றல்லவா இருக்கின்றது ஏன் ஒரு தனித்த பெயரை மாத்திரம் இட முகநூல் அனுமதிப்பதில்லை.

உதாரணத்திற்கு உங்கள் பெயர் கனி மொழி என வைத்துக் கொள்வோம் இதில் கனி என்பதை தவிர்த்து மொழி என்பதை மட்டும் உங்கள் முகநூல் பெயராக இடுவதற்கு முகநூல் அனுமதிக்காது என்றாலும் சிறிய ஒரு உபாயத்தை பயன்படுத்தி "மொழி" என்ற பெயரை மாத்திரம் உங்கள் முகநூல் பெயராக இடலாம்.


அதாவது இந்தோனேசியவில் தனித்த பெயர்களை கொண்டவர்கள் ஏராளமாக இருப்பதால் இந்தோனேசியாவில் முகநூல் பயன்படுத்துபவர்களுக்கு தனித்த பெயரை இட முகநூல் அனுமதியளிக்கின்றது.

எனவே நாமும் எமது வலையமைப்பிலுள்ள Proxy முகவரியை இந்தோநேசியாவுக்குரியதாக மாற்றி ஒரு தனித்த முகநூல் பெயரை இட்டுக்கொள்ள முடியும். இதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றுக. • Firefox இணைய உலாவியை திறந்து கொள்க.

 • கீழுள்ள இணைப்பில் சென்று இந்தோநேசியாவுக்கான Proxy முகவரியையும் Port Number ஒன்றினையும் பெற்றுக்கொள்க. முகவரி • பின் Firefox இன் Menu பகுதியினூடாக Option ------> Option செல்க படத்திலுள்ளவாறு.Firefox menu • இனி Advanced எனும் Tab ஐ தெரிவு செய்து அதில் இருக்கும் Network எனும் உப Tab ஐ சுட்டுக.


Firefox advanced • பின் அதில் Connection என்பதற்கு நேரே Settings என்பதனை காண்பீர்கள்.

 • Settings என்பதனை சுட்டுக இனி படத்திலிருப்பது போன்ற ஒரு சாளரம் கிடைக்கும் அதில் Manual proxy configuration என்பதனை தெரிவு செய்க 


Firefox Manual proxy configuration • இனி அதன் கீழிருக்கும் HTTP Proxy எனும் கட்டத்தில் முன் பெறப்பட்ட முகவரியையும் அதற்கான Port Number இட்டு கீழிருக்கும் கட்டத்தில் Tick செய்து OK அலுத்துக (உதவிக்கு படத்தினை பார்க்கவும்)  • பிறகு உங்கள் முக நூல் பக்கத்துக்கு சென்று மொழியை Bahasa Indonesia என்பதற்கு மாற்றிக்கொள்க (தற்காலிகத்துக்கு) Account Setting ------> General -----> Languge ----> Bahasa Indonesia.முகநூல் மொழி


இனி உங்கள் முகநூல் பக்கம் இந்தோனேசிய மொழியில் தோன்றும்.

முகநூல் அமைப்புக்கள் • பிறகு பெயரை மாற்றுவதற்கு Nama (பெயர்) என்பதற்கு நேரிருக்கும் Sunting (மாற்று)  என்பதனை சுட்டி Depan (First Name) எனும் இடத்தில் நீங்கள் விரும்பும் தனித்த பெயரை மாத்திரம் இட்டு கீழிருக்கும் கட்டத்தில் Tick அடையாளத்தினையும் இட்டு பெயரை தனித்த பெயராக மாற்றிக்கொள்ளுங்கள்.


முகநூல் உபாயம்


அவ்வளவுதான் இனி முகநூலில் உங்கள் பெயர் தனித்த பெயராகவே தோன்றும்.

முகநூல் தனித்த பெயர்


பிறகு நீங்கள் வழமையாக பயன்படுத்தி வந்த மொழிக்கு முகநூல் பக்கத்தை மாற்றிக்கொள்ளலாம். Firefox இல் செய்த மாற்றத்தினையும் ஆரம்பத்தில் இருந்தது போல் மாற்றிக்கொள்ளுங்கள்.


உங்கள் கருத்துக்கள் எம்மை வளப்படுத்தும் உங்கள் அருமையான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
மேலும் பல சுவையான தொழில்நுட்ப தகவல்களை அறிய எமது முகநூல் பக்கத்தினூடாக இணைந்திருங்கள்.
நன்றி.

Love to hear what you think!

1 comments:

 1. Proxy நம்பரை உள்ளீடு செய்தால் internet connection வேலை செய்யவில்லை. எப்படி செய்தாலும் facebook account பெயரை மாற்ற முடிய வில்லை. வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு

 
Top