இன்று ஒரு தனி  மனிதனால் செய்ய முடியாத கற்பனைக்கு எட்டாத பல காரியங்களையும் கணணியை பயன் படுத்தி சில நொடிப் பொழுதுகளில் செய்து முடிக்க முடியுமென்றால் அதனை மறுப்பதற்கில்லை.

எனவே இன்று வீட்டுக்கு வீடு நிறுவனத்துக்கு நிறுவனம் என கணணி தனது ஆதிக்கத்தை செலுத்திவிட்ட இன்றைய நிலையில் கணணியை பயன்படுத்தாதோர் யார் தான் இருக்க முடியும்.


எது எப்படியோ குறிப்பிட்ட ஒரே செயல்பாட்டில் நாம் தொடர்ந்து ஈடுபடுவதானால் சலிப்பு, களைப்பு ஏற்படுவதென்பது மனித இயல்பல்லவா? எனவே நாம் கணணியை தொடர்ந்து பயன்படுத்துகையில் ஏற்படும் சலிப்பை சமாளிக்க பின்வரும் தளங்கள் உங்களுக்காக உதவுகின்றது.இணையதளம்


இது Calm எனும் தளமாகும் நீங்கள் இந்த தளத்துக்கு பிரவேசித்தவுடன் நீங்கள் இளைப்பார வேண்டிய நேர அளவை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் 2 நிமிடம், 5 நிமிடம், 10 நிமிடம் என இங்கு நேர அளவுகள் இருக்கின்றன.

============> Calm

Silk

இது Silk எனும் தளம் இது கருப்பு நிற பின்புலத்தினை கொண்டுள்ளது. இதில் நீங்கள் கீறும் வடிவங்கள் சமச்சீராக இருபக்கங்களிலும் தோன்றுவதுடன் பின்புல ஒலியையும் கேட்க முடிகிறது.

============> Silk


Line 3D


Line 3D எனப்படும் இந்த தளத்தில் 3D Bar களை அவதானிக்கலாம். உங்கள் களைப்பு நீங்கும் வரையில் அவற்றினை விருப்பம் போல் வலைத்துக் கொள்ளுங்கள்.

============> Line 3D


Rain For Me

கடும் வெயில் காலாமா? மலை ஓசையை கேட்கவே ஆசையாக இருக்கின்றதா? அப்படியெனின் இதோ உங்களுக்காக Rain For Me எனும் தளம் உதவுகின்றது.

============> Rain For Me

வர்ண கட்டங்கள்

Into Time எனப்படும் இந்த தளம் பல அருமையான நிறங்களை மாறி மாறி தோன்றச் செய்கின்றது. அதன் மேல் Clik செய்து பாருங்கள் ஏராளமான நிறங்களை கொண்ட கட்டங்கள் உருவாகுவதனை அவதானிக்கலாம்.

 ============> Into Time

Falling Falling இணைய தளம்

இது Falling Falling என அழைக்கப்படுகின்றது. இந்த தளத்துக்கு விஜயம் செய்து பாருங்கள் ஒரு வடிவிலான பல உருவங்கள் தொடர்ச்சியாக கீழே விழுவதாய் உணர முடிவதுடன் அதற்கேற்றவாரான ஒலி பின்புலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 ============> Falling Falling


Tone Matrix தளம்

Tone Matrix எனும் இந்த தளத்தில் ஏராளமான சிறிய கட்டங்கள் தரப்பட்டுள்ளது. இதில் சில புள்ளிகளை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது கோடுகள் வரைவதன் மூலமோ அதற்கேற்ற தாளத்தினை கேட்க முடியும்.

 ============> Tone Matrix

இளைப்பார ஒரு தளம்

Mouse, keyboard ஐ கூட பிடிக்க வேண்டாம் 2 நிமிடம் சும்மா இருந்தால் மட்டும் போதும் என அழைக்கிறது இதோ இந்த தளம் Do Nothing For 2 Minutes.

 ============> Do Nothing For 2 Minutes.


மேலும் இதனையும் பார்க்க: Google செய்யும் அட்டகாசங்களை ஒருமுறை பாருங்களேன். (ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது)


இவைகள் தவிர ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட அழகிய மீன்களை கீழுள்ள இணைப்பில் பார்த்து மகிழுங்கள்.மீன் 1 =======> இங்கு சுட்டுங்கள்

மீன் 2 =======> இங்கு சுட்டுங்கள்

மீன் 3 =======> இங்கு சுட்டுங்கள்

மீன் 4 =======> இங்கு சுட்டுங்கள்

மீன் 5 =======> இங்கு சுட்டுங்கள்


உங்கள் கருத்துக்கள் எம்மை வளமாக்கும் எனவே உங்கள் அருமையான கருத்துக்களை வரவேற்கின்றோம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top