இன்று கணனியின் மூலம் செய்ய முடிகின்ற ஏராளமான செயற்பாடுகளை இன்றைய நவீன இயங்குதளங்களை கொண்ட கையடக்க சாதனங்கள் (Smart Device) மூலமும் நிறைவேற்றிக்கொள்ள முடிகின்றது. எனவே இன்று ஏராளமானோர் பாரம்பரிய முறையிலான சாதனங்களை விட்டு விலகி இன்றைய நவீன சாதனங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர்.


அந்த வகையில் இன்று அதிகமானவர்களின் கைகளில் Android எனும் இயங்குதளத்தை கொண்ட சாதனங்கள் வலம் வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது என்றாலும் கணணி தொடக்கம் இது போன்ற இயங்கு தளங்களை கொண்ட சாதனங்கள் ஆரம்பத்தில் வேகமாகவும் காலப்போக்கில் மந்த கதியில் இயங்குவதும் வழமையே.

இவ்வாறான சந்தர்பங்களில் அந்த சாதனங்கள் மூலம் முழுமையான பயனை பெற முடிவதில்லை எனவே ஆரம்பத்தில் இருந்த அதே செயற்திறனுடன் குறிப்பிட்ட சாதனத்தை பராமரிப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.இதற்கு உதவுகின்றது Advanced Mobile Care எனும் Android சாதனத்துக்கான செயலி.


AMC
AMC Android 

இது மந்தகதியில் இயங்கும் உங்கள் Smart சாதனத்தின் குறைபாடுகளை மிகத்துல்லியமாக இனங்கண்டு நிவர்த்தி செய்கிறது.

உங்கள் சாதனத்தில் தேங்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்குவதுடன் சாதனத்துக்கு சாதனம் தொற்றிக்கொள்ளும் தீய செய் நிரல்கலிளிருந்தும் (Virus) உங்கள் சாதனத்தை பாதுகாக்கின்றது.

நீங்கள் உங்கள் சாதனத்தை Games விளையாடுவதற்காக பயன்படுத்துகையில் தன்னகத்தே கொண்டுள்ள Game Speeder எனும் Tool மூலம் உங்கள் சாதனத்தின்  பின்புலத்தில் இயங்கும் நிரலிகளை கட்டுப்படுத்தி இனிமையான அனுபவத்தினை பெற உதவுகின்றது.மேலும் Battery Saver எனும் Tool மூலம் வீணே விரயமாகும் சக்தியை முறையாக சேமித்துக்கொள்ளவும் முடிகின்றது.

AMC Battery Saver

அத்துடன் Privacy Advisor எனும் Tool மூலம் உங்கள் சாதனத்தில் நிறுவப்படும் ஒவ்வொரு Application உம் உங்கள் சாதனத்தில் இருக்கும் எவ்வாறான வசதிகளை இயக்க முடியுமென்பதனை தனித்தனியாக காட்டுகின்றது.

AMC Privacy Advisor


இதனுள் தரப்பட்டிருக்கும் Application Manager மூலம் உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் Application களை ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக்கொள்ளவும் Move Apps என்பதன் மூலம் உள்ளக நினைவகத்தில் நிறுவப்பட்டிருக்கும் Application களை SD Card இற்கு ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.

Application Manager android


இவைகள் தவிர உங்கள் Contact  மற்றும் Call log போன்றவற்றை இணையத்தில் சேமித்துக்கொள்ள எளிமையான Cloud Backup வசதியை தருகின்றது. இதன் மூலம் உங்கள் சாதனம் தொலைந்துவிடும் சந்தர்பத்திலோ அல்லது புதிய ஒரு சாதனத்தை பயன்படுத்துகையிலோ Contact மற்றும் Call log போன்றவற்றினை மிக இலகுவாக உங்கள் புதிய சாதனத்துக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

contact Cloud Backup


இதற்கும் மேலாக Anti-Theft எனும் மிகவும் பயனுள்ள ஒரு வசதியையும் இது தருகிறது. நான் பயன்படுத்தி பார்ததுக்கமைய இது மிகவும் சாதூர்யமாக இயங்குகின்றது. Advanced Mobile Care நிறுவப்பட்டுள்ள உங்கள் சாதனம் தொலைந்துவிடும் போது Advanced Mobile Care நிறுவப்பட்ட இன்னுமொரு சாதனம் மூலம் தொலைந்து விட்ட உங்கள் சாதனத்தை கட்டுப்படுத்த முடிகிறது.

Anti-Theft mobile


தொலைந்துவிட்ட சாதனத்தில் GPS இயக்கப்படாத நிலையிலும் சாதனம் இருக்கும் இடத்தை மிகவும் துல்லியமாக Google Map மூலம் கண்டுகொள்ள முடியும் 

Privacy Locker மூலம் வீடியோ கோப்புக்கள், ஆவணங்கள் மற்றும் Album போன்றவற்றினை இரகசிய இலக்கம் கொண்டு பாதுகாக்கவும் முடிகிறது.
இவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பதிவின் நீளம் கருதி இவற்றினை நான் இங்கு முழுமையாக குறிப்பிடவில்லை.நீங்களும் Android பாவனையாளர் எனின் இதனை ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.

தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க.வருகைக்கு நன்றி.

Love to hear what you think!

2 comments:

  1. நான் இந்த Advanced Mobile Care என்ற மென் சாதனத்தை என் கைப்பேசியில் பொருத்தியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் இந்த Advanced Mobile Care என்ற மென் சாதனத்தை என் கைப்பேசியில் பொருத்தியுள்ளேன்.

    பதிலளிநீக்கு

 
Top