சிறுவர்களுக்கான இணைய உலாவி.


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையம் என்னதான் பெரும் பங்கை வகித்தாலும். அதில் இருக்கும் அனுகூலங்களுடன் பல அசிங்கங்களும் சேர்ந்தே கிடக்கின்றன.

சிறியோர் முதல் பெரியோர் வரை இணையத்தை பயன்படுத்துவது முக்கிய தேவையாகிவிட்ட இன்றைய யுகத்தில், இணையத்தை பயன்படுத்த சிறுவர்களுக்கு அனுமதிப்பதென்பது சிறுவர்களின் கையில் ஒரு கூறிய ஆயுதத்தை கொடுப்பதற்கு சமனாகும் என்றே கூற வேண்டும்.எது எப்படியோ சிறுவர்களின் அறிவு, திறன், ஆற்றல், போன்றவற்றுடன் ஏராளமான கற்றல் செயற்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இணையத்தை பயன்படுத்த அனுமதிக்காமளிருப்பதும் ஒரு வரவேற்கத்தக்க முடிவல்ல.

எனவே எதிர்கால தலைவர்களான இன்றைய சிறார்களுக்கு இணையத்தில் இருக்கும் நல்ல விடயங்களை மட்டும் வடிகட்டி கொடுக்க உதவுகின்றது Kidzy எனும் இணைய உலாவி.

இணைய உலாவி


  • இது அருவருக்கத்தக்க இணைய பக்கங்களிலிருந்து சிறுசுகளை பாதுகாப்பதுடன் தேவையற்ற ஏனைய பக்கங்களிலிருந்தும் சின்னஞ் சிறுசுகளை பாதுகாக்கின்றது.

  • குறிப்பிட்ட நேர வரையறையை இட்டு அவர்கள் இணையத்தை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த உதவுகின்றது.

-->


இதுதவிர இன்னும் பல அம்சங்களுடன் இலவசமாக கிடைக்கும் இந்த இணைய உலாவியை உங்கள் அன்பு தம்பி, தங்கைகளும் பயன் படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள். 


மேலும் பல தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது முகநூல் பக்கத்தினூடாக இணைந்திருங்கள்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top