தமக்குத்தாமே சவால் விட்டுக்கொண்டு கணணி விளையாட்டுக்களை விளையாடுவதை யார் தான் விரும்ப மாட்டார்கள். உண்மையில் தற்பொழுது உருவாக்கப்படும் அநேகமான விளையாட்டுக்களில் மெய்நிகரான அனுபவத்தினை பெற முடிகிறது. Smart Phone களின் வருகைக்குப் பின்னர் இவைகள் கணனியிலிருந்து மெல்லமாக Smart Phone களுக்கு நகருவதை அவதானிக்க முடிகின்றது.


அந்தவகையில் இன்று அதிகம் சூடு பிடித்திருக்கும் Smart Phone களான Android மற்றும் Apple சாதனங்களுக்கான Games, Application களின் வருகையை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
Mobile Games

இவற்றுக்காக ஏராளமான Games, Application இருந்தாலும் ஒருசிலவையே அதிகம் கவரக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் Candy Crush Saga எனப்படுவது Smart Phone களுக்கான அருமையான ஒரு விளையாட்டாகும். இதனை facebook இலும் விளையாட முடிவதால் இதன் இரசனையை அதிகமானவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இது சிறந்த காட்சியமைப்புக்களை கொண்டிருப்பதுடன் மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு விளையாட்டாகவும் இருக்கின்றது. 
இலவசமாகவே கிடைக்கும் இதனை இதுவரை என்னையும் சேர்த்து 1,031,343 நபர்கள் தரவிறக்கி பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு புதுவிதமான சவால்களை முறியடித்து வெற்றி அடைய வேண்டிய இந்த விளையாட்டை விளையாடும் போது மிகவும் இனிக்கிறது.நீங்களும் இதனைஉங்கள் சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த கீழுள்ள இணைப்புகளில் பொருத்தமான இணைப்பில் செல்க
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top