இன்றெல்லாம் ஆளுக்கொரு பெயர் இருக்கின்றதோ இல்லையோ ஆளுக்கொரு Mobile Phone  என்றாகிவிட்டது. ஒருவருடன் இன்னுமொருவர் தொடர்பு கொள்ளவே என பயன்படுத்தாப்பட்ட Mobile Phone, இன்று ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டு உலா வருகின்றமை நாம் அறிந்ததே.


அந்தவகையில் இன்றைய Smart Phone களில் மிக உயர்ந்த தரத்திலான வீடியோ கோப்புக்களை காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் அதன் பூரண பலனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட வீடியோ கோப்பினை குறிப்பிட்ட மொபைல் சாதனத்துக்கென ஆதரவளிக்கும் வீடியோ வடிவத்திற்கு மாற்றிட வேண்டும்.

இதற்கென உதவுகின்றது WinX Mobile Video Converter. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு வீடியோ கோப்பினை ஏராளமான மொபைல் சாதனங்களுக்கு ஆதரவளிக்கும் படி மாற்றியமைத்திடலாம்.


WinX Mobile Video Converter image


மிக உயர்தரத்திலான வெளியீட்டினை பெற்றுக்கொள்ள முடிவதுடன் வேகமான செயற்பாட்டினையும் கொண்டுள்ளது. மேலும் இம் மென்பொருள் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதுடன் உங்கள் மொபைல் சாதனத்துக்கு ஏற்ற வகையில் Ringtone ஐ உருவாக்கவும் வழி வகுக்கின்றது.

இதன் சந்தை பெறுமதி $49.95 ஆக இருந்தாலும் இதனை இம்மாத இறுதிக்குள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடிகின்றது. 

இதனை தரவிறக்கிக்கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.

Download WinX Mobile Video Converter (Time-limited Giveaway)


winxdvd Giveaway


இந்த இணைப்பின் மூலம் குறிப்பிட்ட பக்கத்திற்கு சென்று Free Trail ஆக மென்பொருளை தரவிறக்கிய பின் License Code இணை பெற்றிட Get License Code என்பதனை சுட்டுக. பின் பெறப்படும் சாளரத்தில் Next Step என்பதனை அழுத்துவதன் மூலம் உங்களுக்கான இலவச License Code இணை பெற்றுக்கொள்ள முடியும்.


மேலும் பல தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது Facebook பக்கத்தினூடாக இணைந்திருங்கள்


!!!!!!!!! வருகைக்கு நன்றி !!!!!!!!!!

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top