இன்று தனி மனித பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விடும் வகையில் துருவிகளின் (Hakers) தொல்லைகள் ஓங்கியுள்ளது. கணனியின் வருகையின் பின்னரான தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சிக்கு மத்தியில் ஒவ்வொருவரும் ஏராளமான நன்மைகளை அடைந்தாலும் அதன் மறு பக்கம் பார்த்தல் அதற்கு ஈடான அச்சுறுத்தல்களை அனுபவிப்பதும் வழமையாகிவிட்ட ஒன்றே.


ஒவ்வொருவரும் தத்தமது காரியங்களை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள தமக்கொரு கணணி என பயன்படுத்தியதன் விளைவாக இந்த சாதனத்தின் பயன்பாடு வியக்கத்தகும் வகையில் விச்வரூபமெடுத்திருக்கின்றது.

துருவிகளின் செயற்பாடு தான் என்ன?


இவ்வொவ்வரு பயனர்களையும் தமது உச்ச திறமையை பயன்படுத்தி தமது வலைக்குள் விழ வைப்பதே துருவிகளின் முக்கிய செயற்பாடாக இருக்கின்றது. இதனால் பாதிக்க படுபவர் பாரிய நட்டத்தில் விழும் ஏராளமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.


Hacker


இன்னுமொரு கணணியை துருவிகள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள்?


துருவிகள் ஒரு கணனியிலிருந்து இன்னுமொரு கணணியை தாக்க பல்வேறு உபாயங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு அவர்கள் உருவாக்கும் தீங்கு விளைவிக்கும் செய்நிரல்களை உங்கள் கணணிக்குள் அவர்கள் எவ்வாறாவது புகுத்த முற்படுவார்கள். இதற்கு நீங்கள் செய்யும் சில செயற்பாடுகளே உதவியாக அமைந்து விடும். அதாவது நீங்கள் பார்க்கும் சில இணைய தளங்களிலிருந்து இவ்வாறான தீய செய்நிரல்கள் தரவிறக்கப்பட்டு நிறுவப்படலாம். அல்லது பாதுகாப்புக்கு அடையாளமே அற்ற இலவச மென்பொருள்களை நீங்கள் தரவிறக்கி நிறுவும் போது இவைகள் உங்கள் கணியில் நிறுவப்படலாம். மேலும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளம் மூலமும் நீங்கள் குறி வைத்து தாக்கப்படலாம் இவைகள் தவிர இன்னும் ஏராளமான வழிகளை இவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இதற்கு தீர்வு தான் என்ன?


எது எப்படியோ வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதுக்கு ஏற்றாட் போல் இவற்றுக்கு தீர்வு காணும் முகமாக பல்வேறு நிறுவனங்கள் இத்தீய செயற்பாட்டை அடையாளம் கண்டு முடக்கும் மென்பொருள்களை அறிமுகப்படுத்தி அவற்றை மேம்படுத்துகின்றன.

அந்த வகையில் இவற்றுக்கென இணையத்தில் ஏராளமான மென்பொருள்களை இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பெறக்கூடியதாக இருக்கின்றது.இந்த தீய செயற்பாட்டிலிருந்து பயனர்களை பாதுகாக்கும் பொறுப்பை IObit Malware Fighter 2 எனும் மென்பொருள் இனிதே நிறைவேற்றுகின்றது. இது spyware, adware, trojans, keyloggers, bots, worms, மற்றும் hijackers என அடையாளம் கண்டு அழைக்கப்படும் தீய செய்நிரல்களை ஆழமாக உங்கள் கணணியை சோதிப்பதன் மூலம் கண்டு அழிக்கின்றது. மேலும் இது அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IObit Malware Fighter 2


20MB அளவைக் கொண்ட இதனை Windows கணனிகளுக்கு இலவசமாக தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம்.

தரவிறக்க இந்த இணைப்பில் செல்லவும் : Download IObit Malware Fighter 2 Freeவருகைக்கு நன்றி.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top