ANGRY BIRDS FRIENDS  

Ravio இனால் அறிமுகப் படடுத்தப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் விரும்பி விளையாடப்படும் ஒரு விளையாட்டென்றால் அது Angry Birds என்பதில் மறுப்பதற்கில்லை.

Angry Birds Friends android


இது மிகக்குறுகிய காலத்தில் அனைவரது மனங்களையும் வென்ற ஒரு அருமையான விளையாட்டாகும். இதனை விளையாடி மகிழ்பவர்கள் ஒரே காட்சியமைப்பை பார்த்து சலிப்படையாமல் இருக்க காலத்துக்குக் காலம் பல்வேறு பெயர்களில் வித்தியாசமான காட்சியமைப்புக்களை கொண்ட பதிப்புக்களை அறிமுகப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இறுதியாக Angry Birds Star Wars எனும் பதிப்பு வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

விடயம் என்னவெனில் நேற்றைய தினம் (2 May 2013) அன்று Angry Birds விளையாட்டின் புதிய பதிப்பான Angry Birds Friends எனும் பதிப்பை Android மற்றும் iOS சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. பல அருமையான காட்சியமைப்புக்களுடனும் இனிமையான ஒலி வடிவங்களுடன் மெருகேற்றப்பட்டுள்ள இந்த விளையாட்டை விளையாடும் அதே சந்தர்பத்தில் நண்பர்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கின்றது.

Angry Birds Friends iOS

இதனை விளையாடுபவர்கள் Angry Birds Friends விளையாட்டை தமது சாதனங்களில் பதிந்த பின் இதனை முழுமையாக விளையாட facebook உடன் இணைந்திருக்க வேண்டுமென்பது இதன் ஒரு அம்சமாகும்.


இது தவிர Windows Smart Phone களை பயன்படுத்துபவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியுள்ளது. 100 புதிய கட்டங்களைக்கொண்ட Angry Birds விளையாட்டினை எதிர்வரும் 15 MAY 2013 ஆம் திகதிக்கு முன் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

இவைகளுக்கான சுட்டி கீழே தரப்பட்டுள்ளது.



Angry Birds பிரியர்களுக்கு நிச்சயமாக இது ஒரு இனிப்பான செய்தியாகவே இருக்கும் என்பதில் அச்சமில்லை


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top