XnSketch எனும் இலவச மென்பொருள்

Photoshop இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் தமது கற்பனைக்கு எட்டியதை எல்லாம்  செதுக்க முடிகின்றது. என்றாலும் Photoshop இற்கு புதியவர்களால் அவ்வாறு முடிவதில்லை. என்றாலும் ஒரு காட்சியை Photoshop மூலம் பலமணி நேரம் செதுக்கி பெறக்கூடிய அதே விளைவை சில மென்பொருள்கள் இலகுவாக செய்து கொள்வதட்கு வழி வகுக்கின்றது.

அந்தவகையில் XnSketch எனும் மென்பொருள் மூலம் தமது புகைப்படங்களுக்கு மிக இலகுவான முறையில் கார்ட்டூன்கள்,  ஓவியம் போன்ற மற்றும் பிற விளைவுகளை சேர்த்துக் கொள்ள முடிகின்றது.

XnSketch இலவச மென்பொருள்




சிறந்த இடைமுகத்துடன் ஒருமுறை Click செய்வதன் மூலம் புகைப்படங்களின் விளைவுகளை மாற்றக்கூடிய வகையில் அமையப் பெற்றுள்ள இம் மென்பொருளை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் இலகுவில் பயன்படுத்தக் கூடியதாய் உள்ளது.

மேலும் இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை என்பதுடன் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கும் இம்மென்பொருள் வெறும் 14MB அளவினையே கொண்டுள்ளது.


இது தவிர இதன் மூலம் பெறப்படும் வரு விளைவுகளை Picasa, Facebook, Tumblr, Imgur, Imageshack, YFrog, GlowFoto, TwitPic போன்ற தளங்களில் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வசதியுமுண்டு.



இதனை Windows xp/7/8 உட்பட  Mac, Linux போன்ற இயங்கு தளங்களிலும் பயன்படுத்த முடியும். இதனை தரவிறக்க கீழுள்ள முகவரியில் செல்லவும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top