புதிய வசதியுடன் Viber

மிகக் குறுகிய  காலத்தினுள் அதிக வரவேற்பை பெற்றவைகளுள் Viber உம் ஒன்றாகும். Viber ஆனது இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இலவச குறுஞ் செய்திகளை அனுப்புவதற்கும் மட்டுமல்லாது புகைப்படங்கள், Emoticon, Location போன்றவற்றினையும் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. மேலும் இதன் மூலமான உரையாடலின் போது மிக உயர் தரத்திலான (HD Quality) ஒலியினையும்உணர முடிகின்றது.


Free Call

Viber ஆனது உலகலாவிய ரீதியில் கிட்டத்தட்ட  400 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களை கொண்டிருப்பதுடன் எவ்வித விளம்பர இடையூறுகளுமின்றி முற்றிலும் இலவசமாகவே இதன் சேவை கிடைக்கின்றது. இதற்கு தேவைப்படுவது 3G வலையமைப்பு அல்லது Wi-fi வலையமைப்பு மாத்திரமேயாகும்.

Veber for Android
எவ்வித பதிவுகளுமின்றி மிக இலகுவான முறையில் எமது தொலைபேசி இலக்கத்தினை மட்டும் உள்ளிடுவதன் மூலம் இதன் சேவையை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

Viber for Windows


மேலும் நாம் எமது Mobile Phone இல் சேமித்து வைத்திருக்கும் இலக்கங்களில், இந்த Viber மென்பொருளை பயன்படுத்தும் பாவனையாளர்களை கண்டறிந்து Viber இன் Contact பட்டியலில் இணைத்துக்கொள்கிறது இதன் மூலம் Viber இனை பயன்படுத்தும் எமது உறவினர்கள், நண்பர்களை மிக இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இலவச கணணி அழைப்பு

இதனை Android, iOS, BlackBerry, Windows Phone, Nokia போன்ற சாதனங்களில் பயன்படுத்த முடிவதோடு இதனை கணனியில் (Windows, Mac) பயன்படுத்தும் வசதியையும் அண்மையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேலும் Video அழைப்புக்களுக்கான முழு ஆதரவையும் வழங்குகிறது.

இதனை உங்கள் சாதனத்திற்கும் தரவிரக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top