கூகுள் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் கூகுள் பற்றி தேடாவிட்டாலும் கூகுள் உங்களை தேடி வரும் என்றே சொல்ல வேண்டும். கூகுள் பல்வேறு வடிவங்களில் அதன் சேவையினை பயனர்களுக்கு வழங்கி வந்தாலும் அன்று தொடக்கம் இன்று வரை தேடல் இயந்திரத்தின் முதல்வனாகவே இருந்து வருகிறது இந்த கூகுள்.
தேடல்களுக்கான சிறந்த முடிவுகளை Google தருவதோடு இன்னும் இலகுவாக தேடல் முடிவுகளை அடைந்திட கூகுள் பல்வேறு சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

குறிப்பு: 

கூகுளில் அறிமுகப்படுத்தப்படும் புதுப்புது வசதிகள் இந்த பக்கத்தில் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: (18-1-2016):

கூகுள் மூலம் எண்களை எழுத்துக்களாக மாற்றுவது எப்படி?

கூகுள் தேடியந்திரம் மூலம் ஒன்று தொடக்கம் ஒரு ட்ரில்லியன் (1000000000000) வரையான எண்களை எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது, என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், ஒன்று தொடக்கம் ஒரு ட்ரில்லியன் வரையான எண்களுள் எந்த ஒரு பெறுமானத்தை கொண்ட எண்களையும் எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.இதற்கு குறிப்பிட்ட எண்களுக்கு பின்னால் =English என தட்டச்சு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு 1000 என்பதை எழுத்து வடிவிவில் பெற்றுக்கொள்ள 1000 =English என தட்டச்சு செய்ய வேண்டும்.புதுப்பிக்கப்பட்டது: (4-9-2015)

சொற்களை உடனடியாக மொழி பெயர்துக் கொள்ள 

கூகுள் மொழிபெயர்த்தல்


பொருள் தெரியாத ஆங்கில சொல்லுடன்  In Tamil  எனும் சொல்லை www.google.com தளத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் அவற்றுக்கான தமிழ் மொழி பெயர்ப்பை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு Thanks எனும் ஆங்கில சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பை உடனடியா கூகுள் தளம் மூலம் பெற்றுக் கொள்வதற்கு Thanks in Tamil என தட்டச்சு செய்யலாம்...!


புதுப்பிக்கப்பட்டது: (4-9-2015)

கூகுளின் முகப்புப் பக்கத்தின் மூலமாக பல பயனுள்ள சுவாரஷ்யமான தகவல்களை மிக விரைவாக தேடிப்பெற்றுக் கொள்வதற்கு என புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.


Google Fun Facts


அதாவது கூகுள் தேடியந்திரத்தில் i'm feeling curious என்றோ அல்லது fun facts என்றோ தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் ஏராளமான புதிர்களுக்கு உடனடியாக கூகுளின் முகப்புப் பக்கத்திலேயே விடைகளை பெற முடியும்.

அவைகள் ஒவ்வொன்றும் ஒரு வினாவுக்கு விடையாக அமைந்திருப்பதுடன் அவைகள் பெறப்பட்ட தளங்களின் இணைப்பும் கீழே தரப்படுகின்றது. அத்துடன் மேற்குறிப்பிட்ட முறையில் தேடிப்பெறும் தேடல் முடிவின் கீழே தரப்படும் ASK ANOTHER QUESTION என்பதை சுட்டுவதன் மூலம் இன்னும் பல சுவாரஷ்யமான உண்மைகளை தொடர்ச்சியாக பெறலாம்.


கூகுள் தளத்தின் மூலம் துல்லியமான முடிவுகளை பெறுவதற்கான மேலும் பல உபாயங்களை கீழே பார்க்கலாம்.


தொடர்புடைய இடுகை:


குறிப்பிட்ட ஓரிடத்தின் காலநிலையை பற்றி அறிய வேண்டுமாயின்

  

google weather Google.com தேடல் பக்கத்துக்கு சென்று Weather என தட்டச்சு செய்து காலநிலை அறிய வேண்டிய இடத்தினை தட்டச்சு செய்க உதாரணமாக இலங்கையின் தலைநகரம் Colombo இன் காலநிலையை அறிய வேண்டுமெனின்Weather colombo என தட்டச்சு செய்க.

 Google ஐ ஒரு கணிப்பான பயன்படுத்த


Google கணிப்பான்
கணிக்க வேண்டிய சமன்பாடை Google இல் தட்டச்சு செய்கஉதாரணமாக : 5*5(9+1) இதனை Google இடம் கொடுத்துப்பாருங்கள் துல்லியமாக 250 என சொல்லும்.

   

ஓர் அலகிலிருந்து இன்னுமோர் அலகுக்கு மாற்ற

 

Google அலகுக்கு மாற்ற
உதாரணமாக : கிராம் இனை கிலோ கிராம் இற்கு மாற்ற 3500g to kg

வெப்பநிலை, நீளம், வேகம், ஒலி, இடம், நேரம், சேமிப்பகம்,என ஏராளமான அலகுகளை மாற்றிக்கொள்ள முடியும்.


தற்போதைய உங்கள் வலையமைப்பின் முகவரியை கண்டறிய.


Google தேடல் பக்கத்தில் My Ip என தட்டச்சு செய்க.

 நேரத்தை அறிய 

 

Google நேரம்

குறிப்பிட்ட ஓர் இடத்தின் நேரத்தை அறிய Time என தட்டச்சுசெய்து குறிப்பிட்ட இடத்தினை தட்டச்சு செய்க

உதாரணமாக : Time Tamil Nadu


நாணய மாற்று விகிதத்தை அறிய

 

Google நாணயமாற்று விகிதம்

குறிப்பிட்ட அந்த நாட்டு நாணயத்தை அடையாளப் படுத்தப்படும் குறியீட்டுடன் பின்வரும் அமைப்பில் தட்டச்சு செய்க

உதாரணமாக : 10 அமெரிக்க டொலர்களை இந்திய ரூபாவுக்கு மாற்றிக்கொள்ள 10 USD to INR என தட்டச்சு செய்யலாம்.

 

குறிப்பிட்ட ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டுமெனின் 

 

Google பொருளறிய


Define என தட்டச்சு செய்து பொருளறிய வேண்டய சொல்லை தட்டச்சு செய்க

உதாரணமாக : Leadership என்பதன் பொருளறிய வேண்டும் எனின் define leadership என தட்டச்சு செய்க.

ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் சனத்தொகைய அறிய 

 

Google சனத்தொகையை  அறிய


Population என தட்டச்சு செய்து சனத்தொகையை  அறிய வேண்டிய நாட்டை அல்லது பிரதேசத்தை தட்டச்சு செய்க.

உதாரணமாக : Population india

  

சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்.


google இல் சூரிய அஸ்தமனம்.குறிப்பிட்ட ஓரிடத்தின் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அறிய வேண்டுமெனின் பின்வருமாறு தட்டச்சு செய்க


சூரிய உதயத்தை அறிய : Sunrise குறிப்பிட்ட இடம்

சூரிய அஸ்தமனத்தை அறிய : Sunset குறிப்பிட்ட இடம்

உதாரணமாக : Sunrise colombo, Sunset kandy

இவை தவிர Google செய்யும் வேடிக்கைகளை Google செய்யும் அட்டகாசங்கள் எனும் எமது முன்னைய பதிவில் காணலாம் 

குறிப்பிட்ட ஒன்று தொடர்பாக பொதுவான தேடல் முடிவை பெற 

நீங்கள் Google தளம் மூலம் ஏதாவது ஒன்றினை தேடிப்பெருவதற்காக Google தளத்தினை திறந்தால் அது உங்கள் நாட்டிற்குரிய Domain இற்கு அது தானாகவே மாறிக்கொள்ளும்.

அதாவது நீங்கள் இந்தியாவில் இருந்து Google தளத்தை பயன்படுத்தும் போது www.google.co.in என்றவாறு Google இன் தளம் தோன்றும்.

அதே போல் இலங்கையில் இருந்து Google தளத்தை பயன்படுத்தும் போது www.google.lk என்றவாறு தோன்றும்.

இது போல் நாட்டுக்கு நாடு அதன் Domain Name மாறுபடும் எனவே நீங்கள் குறிப்பிட்ட ஏதாவது ஒன்று தொடர்பான தகவலை தேடிப்பெறும் போது அதன் தேடல் முடிவானது குறிப்பிட்ட நாட்டை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்.

உதாரணமாக  www.google.co.in மூலம் Pizza Hut என்பதை தேடும் போது அது இந்தியாவில் உள்ள Pizza Hut தொடர்பான விடயங்களை தரும். அதே போல்  www.google.lk எனும் இலங்கைக்குரிய Sub Domain மூலம் Pizza Hut என்பதை தேடும் போது இலங்கையில் இருக்கக்கூடிய Pizza Hut தொடர்பான தகவல்கள் Google தேடல் முடிவில் பெறப்படும்.

இருந்தாலும் இந்த Pizza Hut தொடர்பான பொதுவான தேடல் முடிவை பெற விரும்பினால் என்ன செய்யலாம்?

இதற்கு Google.com என்பதுடன் ncr என்பதை சேர்த்து Google இன் முகவரியை அமைக்க வேண்டும் அவ்வாறு அமைத்தால்  http://www.google.com/ncr என்றவாறு அமையும். 

(ncr = no country redirect)

இதன் போது Google இன் Domain Name நாட்டுக்கு நாடு மாற்றமடையாது இதன் போது எந்த ஒரு தேடல் முடிவினதும் பொதுவான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை:


Google தளத்தில் எமக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரே வடிவத்தை  கொண்ட கோப்புக்களை தேடிப்பெற

இணையமானது பறந்து விரிந்த ஒரு தகவல் கிடங்காகவே இருந்து வருகின்றது இதில் அன்றாடம் புதுப்புது தகவல்கள் சேர்க்கப்படுவதுடன்  படுவதுடன் இதிலிருந்து அன்றாடம் பல கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றும் வருகின்றனர்.

அந்தவகையில் இவ்வாறு பறந்து பட்ட இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து எமக்குத் தேவையான தகவல்களை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு உதவுகின்ற வசதியே Google, Bing, Yahoo போன்ற தேடியந்திரங்கள் தருகின்ற வசதி ஆகும்.

எமக்குத் தேவையான தகவல்களை தேடி சிறந்த முடிவுகளை பெற Google ஆனது மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்று விளங்குவதுடன் அதிகம் வசதிகளை கொண்ட தேடியந்திரமுமாகும்.

அந்த வகையில் Google தளத்தில் எமக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரே வடிவத்தினை கொண்ட கோப்புக்களை தேடிப்பெற வேண்டும் எனின் அதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.நீங்கள் குறிப்பிட்ட ஒரே வடிவத்தினை கொண்ட ஆவணங்கள் அல்லது கோப்புக்களை Google இல் தேடிப்பெற வேண்டும் எனின் நீங்கள் பெற விரும்பும் கோப்பின் பெயரை தட்டச்சு செய்து பின் Filetype: என்பதுடன் குறிப்பிட்ட ஆவண வடிவத்தையும் சேர்த்து தேடுதல் வேண்டும்.

xxx xx xx Filetype:xxx

[Your File Name Filetype:(File Format)]உதாரணத்திற்கு .mkv வடிவில் அமைந்த தமிழ் திரைப்படங்களை Google இல் தேட வேண்டும் எனின் Tamil Movie filetype:mkv என தட்டச்சு செய்து தேடுதல் வேண்டும் அதே போல் உங்கள் குழந்தைகளுக்கு அழகியதொரு பெயரை வைத்துக்கொள்ள தமிழ் பெயர்களின் பட்டியலை கொண்ட PDF ஆவணத்தை Google இல் தேடிப்பெற வேண்டும் எனின் Tamil Baby Names Filetype:pdf என தட்டச்சு செய்து தேடுங்கள் இதன் போது Filetype என்பதற்கு அருகில் நீங்கள் குறிப்பிடும் வடிவத்தில் உள்ள கோப்புக்கள் மாத்திரம் உங்கள் தேடல் முடிவில் காண்பிக்கப் படும்.

சரியான தேடல் முடிவை பெறுவதற்கு 

நீங்கள் Google தேடியந்திரத்தின் மூலம் ஏதாவது ஒரு தகவலை தேடிப்பெற முயற்சிக்கும் போது நீங்கள் தேடும் ஒரு சொல்லுடன் நீங்கள் தேடாத இன்னுமொரு சொல்லும் தேடல் முடிவில் வருவதால் உங்களது தேடலை சரியாக மேற்கொள்ள முடியவில்லையா?உதாரணத்திற்கு நீங்கள் Google தேடியந்திரத்தின் மூலம் "அகத்தின் அழகு" என்ற சொற்களைக் கொண்ட தளங்களை பார்க்க விரும்புகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் அகத்தின் அழகு என தட்டச்சு செய்து தேடும் போது "முகத்தில் தெரியும்" என்ற சொல்லும் அதனுடன் தானாகவே சேர்ந்து வருவதனை அவதானிப்பீர்கள். அதாவது தேடல் முடிவு "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என அமைந்திருக்கும்.

எனவே இங்கு முகத்தில் தெரியும் என்ற சொல் உங்கள் தேடல் முடிவில் வராமல் "அகத்தின் அழகு" என்ற சொற்களைக் கொண்ட தளங்கள் மாத்திரம் தேடல் முடிவில் தேன்ற வேண்டும் எனின் முகத்தில் தெரியும் என்ற சொல்லுக்கு முன்னாள் கழித்தல் குறியீட்டை (Minus -) இட்டு தேடலை மேற்கொள்ளலாம். இதன் போது முகத்தில் தெரியும் என்ற சொல் உங்கள் தேடல் முடிவில் தோன்றமாட்டாது.

இப்போது பின்வருமாறு தட்டச்சு செய்து தேடிப்பாருங்கள்.

அகத்தின் அழகு -முகத்தில் தெரியும்.

இங்கு முகத்தில் தெரியும் என்ற சொல் தோன்றமாட்டாது.புதுப்பிக்கப்பட்டது:

குறிப்பிட்ட ஒரு திரைப்படம் வெளியாக இருக்கும் திகதியை அறிய வேண்டுமா?

அப்படியாயின் குறிப்பிட்ட திரைப்படத்தின் பெயருடன் release date என்பதனையும் உள்ளிட்டு தேடிப்பாருங்கள். இனி அந்த திரைப்படம் வெளியாக இருக்கும் திகதியை அறிந்துகொள்ளலாம்.


குறிப்பிட்ட ஒருவர் பாடக்கூடிய பாடல்களை மாத்திரம் தேடிப்பெற வேண்டுமா?

குறிப்பிட்ட ஒருவர் பாடக்கூடிய பாடல்களை மாத்திரம் Google தளம் மூலம் தேடிப்பெற்றுக் கொள்ளவும் முடியும்.

உதாரணமாக ஹரிஹரன் பாடக்கூடிய பாடல்களை மாத்திரம் இணையத்தின் மூலம் தேடிப்பெற விரும்பினால்  song by hariharan என தட்டச்சு செய்து தேடிப்பாருங்கள்.

இனி அவரால் பாடப்பட்ட பாடல்கள் பட்டியல்படுத்தப்படுவதனை அவதானிக்கலாம்.


புதிப்பிக்கப்பட்டது: (25/9/2014)

ஒரு ஆங்கில சொல், அது எவ்வாறு உருவானது என்பதை அறிய 

குறிப்பிட்ட ஒரு ஆங்கில சொல், அது எவ்வாறு உருவானது என்பதை Google தளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

அதாவது நீங்கள் அறிய வேண்டிய சொல்லுடன் etymology என தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும்.

உதாரணத்திற்கு technology எனும் சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதனை அறிய Google தேடியந்திரத்தில் technology etymology என தட்டச்சு செய்து தேடினால் அந்த சொல் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் tekhnologia எனும் கிரேக்க சொல்லுடன் Logy என்ற ஆங்கில சொல் இணைந்ததன் மூலம் உருவானது என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.


புதிப்பிக்கப்பட்டது: (11/11/2014)

ஒரு நாட்டின் நேரத்துடன் இன்னுமொரு நாட்டினது நேரத்தினை ஒப்பிட்டு பார்க்கGoogle தேடியத்திரமானது வெறும் இணையதளங்களை தேடித்தருவதுடன் மாத்திரம் நின்றுவிடாது பல்வேறு தகவல்களையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது.

அந்த வகையில் Google தளம் மூலமாக ஒரு நாட்டின் நேரத்துடன் இன்னுமொரு நாட்டினது நேரத்தை ஒப்பிட்டு பார்க்கவும் முடியும்.

உதாரணத்திற்கு சென்னையில் பிற்பகல் 4 மணி ஆக இருக்கும் அதேநேரம் மலேசியாவில் நேரம் என்ன? என்பதை அறிய விரும்பினால் 4:00 pm chennai in Malaysia என Google தேடியந்திரத்தில் தட்டச்சு செய்து தேடிப்பாருங்கள்.

சென்னையில் பிற்பகல் 4 மணி ஆக இருக்கும் அதேநேரம் மலேசியாவில் மாலை 6:30 ஆக இருக்கும் என்பதை Google தளம் மூலம் அறியலாம்.


இது போன்ற மேலும் பயனுள்ள தகவல்களுக்கு எமது பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.

எமது Tamilinfotech பேஸ்புக் பக்கம் 

எமது Tamilinfotech கூகுள் பிளஸ் பக்கம் 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top