தேடியந்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Google அல்லவா ? இதனை சற்று வித்தியாசமாக பயன்படுத்தி பார்போமா?


கூகுள் தளத்தில் "குறிப்பிட்ட சில சொற்களை" உள்ளிட்டு நாம் தேடலை மேற்கொள்ளும் போது சில சுவாரசியமான முடிவுகளும் கிடைப்பதுண்டு...அந்தவகையில் பின்வரும் சொற்றொடரை www.google.com தளத்தில் உள்ளிட்டு தேடலை மேற்கொள்ளுங்கள்...

a long time ago in a galaxy far far away

உங்களுக்கு ஓர் சுவாரசியமான முடிவு காத்திருக்கிறது.


மேலும் பின்வரும் சொற்களும் கூகுள் தளத்தில் சுவாரஷ்யமான முடிவுகளை பெற்றுத்தரும்.

  • Do a Barrel Roll 
  • Zerg Rush
  • Tilt

மேலும் www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து I m feeling Lucky என்பதனை சுட்டி பாருங்கள்.


  • Google Sphere
  • Google Gravity
  • Rainbow Google

கூகுள் அட்டகாசங்கள்

இவை தவிர googl தரும் முடிவுகளை நீங்கள் தலை கீழாக பார்க்க விரும்பின் கீழுள்ள இணைப்பில் செல்க Google இன் OO இரண்டையும் மறைக்க கீழுள்ள இணைப்பில் சென்று எங்காவது ஓரிடத்தில் சுட்டுங்கள் (Click)


Google இல் Pacman விளையாட்டை விளையாட


மேலும் Google இல் தோன்றும் அனைத்து Doodle களையும் பார்க்கதிருத்த முடியாத ஒரு சொல் Google தேடியந்திரத்தில் உள்ளது.

நீங்கள் Google தேடியந்திரம் மூலம் ஏதாவது ஒரு தகவலை தேடிப்பெறும் போது நீங்கள் தேடுவதற்காக உள்ளிட்ட அந்த சொல் எழுத்து பிழைகளை கொண்டிருந்தால் Google தேடியந்திரமானது அதனை தானாகவே திருத்தி சரியான தேடல் முடிவுகளை காண்பிக்கும் அல்லவா?

உதாரணத்திற்கு: Thamil என நீங்கள் Google தேடியந்திரத்தில் தட்டச்சு செய்தால் Google தேடியந்திரமானது Thamil என்பதனை திருத்தி Tamil என்பதற்கான தேடல் முடிவையே காண்பிக்கும்.

ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு சொல் உள்ளது அதனை நீங்கள் எவ்வளவுதான் சரியாக தட்டச்சு செய்து தேடினாலும் கூட அது தவறானது என்றே Google காண்பிக்கும்.

அந்த சொல்தான் recursion என்பதாகும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top