புதியதொரு கணணியை அல்லது புதிதாக Windows நிறுவப்பட்ட ஒரு கணணியை பயன்படுத்துகையில் கண்ணிமைக்கும் நேரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இயங்குவது அனைவருக்கும் அனுபவத்தில் இருக்கலாம் என்றாலும் காலப்போக்கில் அதன் வேகத்தை நான் சொல்லி நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை.

Synei System Utilities மென்பொருள்என்றாலும் நீங்கள் கணணியை முறையாக பராமரிப்பதன் மூலம் ஆரம்பத்தில் இருந்த அதே வேகத்தில் நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதற்காக உதவுகின்றது "Synei System Utilities" எனும் மென்பொருள்.

இதெற்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் சிறந்த தனித்துவமான மென்பொருட்களை அறிமுகப்படுத்துவதில் +தகவல் தொழிநுட்பம் கண்ணும் கருத்துமாய் இருக்கும்.

அந்தவகையில் Synei System Utilities எனும் மென்பொருளானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள் என்பதுடன் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது. மேலும் இதனை கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை Double Click செய்வதன் மூலம் நேரடியாக பயன்படுத்தலாம் (Portable Application). 


கணனியில் இருக்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணனியின் வேகத்தை அதிகரிப்பதுடன் விண்டோஸ் இல் இருக்கும் குறைபாடுகளை நீக்கி கணனிக்கு பாதுகாப்பளிக்கின்றது. 
மேலும் இணையம், இணைய உலாவி, கணினி விளையாட்டுக்கள், போன்ற வற்றினை எவ்வித தங்கு தடையுமின்றி வினைத்திறனாக பயன்படுத்த உதவுவதுடன் மடிக்கணணி எனின் அதன் சக்தியை சேமிக்க வசதிகளையும் கொண்டுள்ளது.


இது தவிர கணணியை தானாக Shutdown செய்வதற்கான வசதியுடன் இன்னும் பல அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இலவசமான மென்பொருளை தரவிறக்ககீழுள்ள இணைப்பில் செல்லவும்.


  • இதனை Windows XP உட்பட Windows 8 வரை எந்த ஒரு Windows கணணியிலும் பயன்படுத்த முடியும்.
  • இதனை பயன்படுத்த .NET Framework 3.5

குறிப்பு : பெரும்பாலான மென்பொருள்கள் இயங்குவதற்கு Microsoft இன் .NET Framework தேவைப்படும் இது உங்கள் இயங்கு தளத்தில் நிறுவப்பட்டு இல்லையெனின் இதனை கீழுள்ள சுட்டி மூலம் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

Download .NET Framework For windowsLove to hear what you think!

1 comments:

  1. In windows 7 and windows 8 we do not need to download .NET Framework if you jest enable that Features (go to control panel and search "Turn Windows features on or off" then it will automatically download or check it out http://www.c-sharpcorner.com/UploadFile/6cde20/make-turn-windows-features-on-or-off-using-windows-8/

    and one more thing some thing problem in this Comment box some time Press "Pulish " Butten and "Preview" Butten and also "Comment as:" drop list,, sorry for that

    பதிலளிநீக்கு

 
Top