புலக்கத்தில் என்னதான் பல இயங்குதளங்கள் இருந்தாலும் Microsoft இன் Windows ஐ விஞ்சுவதற்கு இது வரை எதுவுமில்லை ஆரம்பம் தொட்டு இன்று வரை கணனிகளுக்கான இயங்கு தள போரில் No: 1 ஆகவே திகழ்கின்றது Microsoft

காலத்துக்கு காலம் பயனர்களின் தேவை விருப்பங்களினை கருத்தில் கொண்டு தனது இயங்குதளத்தை மேம்படுத்தி வந்துள்ளதுடன் நடைமுறையில் Microsoft இன் Windows 8 பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.


சிறந்த முறையில் வன்பொருள்களை ஆதரித்து பயனர்களுடன் சார்ந்து செல்லும் Windows 7 மற்றும் Windows 8 ஐ விரும்பாதவர்கள் யார் தான் இருக்க முடியும். விண்டோஸ் பதிப்புக்களில் Windows XP அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்று அதிகமானோர் இதன் புதிய பதிப்பான Windows 7, Windows 8 ஐ பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

Windows 8 கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் என்றாலும் Microsoft இன் இணைய தளத்திலிருந்து தரவிறக்கி இதனை 90 நாட்களுக்கு சோதனை பதிப்பாக பயன்படுத்த முடியும்.


 விண்டோஸ்   8


என்றாலும் இந்த சோதனை காலம் முடிவடைந்தாலும் "slmgr -rearm" எனும் Code இனை பயன்படுத்தி மேலும் 30 நாட்களுக்கு பயன் படுத்த முடியும் இவ்வாறு மூன்று தடவை மொத்தம் மேலும் 90 நாட்களுக்கு பயன்படுத்த முடிகின்றது.

Windows 8, 7 சோதனை காலத்தினை அதிகரித்துக்கொள்ள செய்ய வேண்டியது........


Windows 8 இல் search பகுதிக்கு சென்று Command Prompt ஐ Right Click செய்து Run as Administrator மூலம் திறந்து கொள்ளுங்கள்.

பின் "slmgr /dli" என்பதனை Command Prompt இல் தட்டச்சு செய்வதன் மூலம் உங்கள் விண்டோஸ் இற்கான சோதனைக்காலம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம். இதனை மேலும் விபரமாக அறிய "slmgr /dlv" என்பதனை தட்டச்சு செய்யலாம்.

windows 8 licence details


சோதனை காலம் முடிவடையும் திகதி மற்றும் நேரத்தினை அறிய "slmgr /xpr" என்பதனை தட்டச்சு செய்ய வேண்டும்.சோதனை காலத்தினை மேலும் 30 நாட்கள் அதிகரித்துக்கொள்ள "slmgr /rearm" என்பதனை தட்டச்சு செய்யலாம்.Windows 7 இற்கும் இதே முறை தான் என்றாலும் சோதனை காலத்தை அதிகரிக்க "slmgr -rearm" என்பதனை பயன்படுத்த வேண்டும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top