Bing இன் பின்புலப்படங்களை தரவிறக்க இலகு வழி.

தமது கணனிக்கு அழகிய பின்புல படங்களை இட்டு அழகாக வைத்திருக்க யார் தான் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் Bing இணைய தேடியந்திரமானது உள்ளங்களை கவரக்கூடிய விதத்தில் நாளாந்தம்  பல புதிய புதிய HD Wallpaper களை அதன் முகப்புப்பக்கத்தில் பின்புறமாக கொண்டு வருகிறது. இவைகளை நாளாந்தம் தரவிரக்கிக் கொண்டாலே மிகப்பெரும் HD Wallpaper தொகுப்பொன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும்.

 இதனை Firefox இணைய உலாவியை பயன்படுத்தும் போது

 Bing முகப்புப்பக்கத்துக்கு சென்று Right Click செய்ய வரும் சாளரத்தில் View Background Image என்பதனை தெரிவு செய்க

படங்கள் தரவிறக்க



பின் முகப்புப்பக்கத்தில் பின்புறமாக இருக்கும் பின்புல படம் மட்டும் தனியாக தோன்றும். இனி அதனை Right Click செய்து உங்களது கணனியில் சேமித்துக்கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்துவது Google இன் Chrome உலாவி எனின்

Bing முகப்புப்பக்கத்துக்கு சென்று Right Click செய்ய வரும் சாளரத்தில் Inspect Element என்பதனை தெரிவு செய்க இனி இணைய உலாவியின் கீழ்பகுதியில் ஒரு சாளரம் தோன்றுவதனை அவதானிக்கலாம். அதில் Styles எனும் பகுதிக்கு கீழிருக்கும் Background Image என்பதன் URL ஐ Copy செய்து இணைய உலாவியின் Address Bar இல் Past செய்து Enter விசையை அழுத்துக

தரவிறக்க உபாயம்

 இனி Bing முகப்புப்பக்கத்தில் பின்புறமாக இருக்கும் பின்புல படம் மட்டும் தனியாக தோன்றும். பின் அதனை Right Click செய்து உங்களது கணனியில் சேமித்துக்கொள்ளலாம்.


இது தொடர்பில் சந்தேகங்கள் இருக்குமெனின் எமது Facebook பக்கத்தின் Massage என்பதன் மூலம் தொடர்புகொள்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top