Pen Sized Scanner

Scanner மற்றும் குரல் பதிவிக்கொண்ட  Ballpoint பேனை

 Hammacher Schlemmer ஆனது பல சுவாரஷ்யமான தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒரு Ballpoint பேனையை அறிமுகப்படுத்தியுள்ளது.  Pen Sized Scanner என அழைக்கப்படும் இந்த பேனை மூலம் ஆவணங்களை 2048 x 1536 pixel அளவில் மிகவும் தெளிவாக படமெடுக்க முடிகின்றது இதற்காக இதனுள் 5MP திறனுடைய Camera பொருத்தப்பட்டுள்ளதுடன் 1 GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது.



இதன் மூலம் ஆவணங்களை படமெடுக்கும் போது நீள்சதுர வடிவில் சிவப்புநிற ஒளிக்கற்றை தோன்றுகின்றது. இதன்மூலம் நாம்  Scan செய்ய வேண்டிய இடத்தினை துல்லியமாக அடையாளப்படித்திக்கொள்ள முடிவதுடன் இதனை ஒருதடவை Charge செய்வதன் மூலம் 300 க்கும் மேற்பட்ட படங்களை எடுக்க முடிகின்றது. இதனுள் குரல் பதிவுகளையும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Apple 128GB iPad 4

 Apple இன் Retina திரையைக்கொண்ட 128GB iPad 4


128GB உள்ளக நினைவகமாக கொண்ட iPad 4 இனை Apple அறிமுகம் செய்யவுள்ளது. இதில் Wifi ஐ மட்டும் கொண்ட  iPad 4 இனை $729 ஆகவும் WiFi மற்றும் Cellular வசதிகளை கொண்ட iPad 4 இனை $929 ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது.

original BlackBerry Z10

BlackBerry Z10 உத்தியோக பூர்வமாக அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.


 RIM தனது புதிய Smart Phone ஆன BlackBerry Z10 ஐ ஓரிரு நாட்களுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தது. இது 4.2 அங்குல தொடு திரையுடன் 1280 x 768 pixels
 resolution ஐ கொண்டுள்ளது.

BlackBerry 10 ஐ இயங்குதளமாக கொண்டுள்ள இந்த Smart Phone, dual core 1.5GHz வேகத்திலான processor உடன் 2GB RAM மற்றும் 16GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது.மேலும் நினைவகத்தை microSD மூலம் 32GB வரையில் அதிகரிக்கும் வசதியுமுண்டு.

இது இருபக்க Camera க்களையும் கொண்டுள்ளது இதன் முன் பக்க Camera 2 megapixel திறனைக்கொண்டுள்ள அதேவேளை 3x Zoom செய்யக்கூடிய வதியுமுண்டு. மேலும் இதன் பின் பக்க Camera மூலம் HD தரத்திலான video க்களினை பிடிக்க முடிவதுடன் 5x digital zoom மற்றும் auto-focus வசதிகளை கொண்ட இந்த Camera 8MP திறன்கொண்டதாகும்.


இது தவிர 130mm நீளம் 65.6mm அகலம்  9mm தடிப்பை கொண்ட இந்த Smart Phone ஆனது 4.0 தரமுடைய Bluetooth வசதியையும் 802.11 a/b/g/n Wifi மற்றும் A-GPS ஆகியவற்றை தன்னகமாக கொண்டுள்ளது.



பதிவின் நீளம் கருதி BlackBerry Q10 மற்றும் சில புதுவரவுகளை எமது சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்ளவுள்ளோம் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.


Love to hear what you think!

1 comments:

 
Top