Digiarty Software ஆல்  2013 February 17 ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படும் 6300 இலங்கை ரூபா மதிப்புடைய கணணி மென்பொருள்.

கணணி மென்பொருட்களை தயாரித்து வெளியிடும் பிரபல Digiarty Software நிறுவனமானது வருடத்தின் சில முக்கியமான தினங்களில் பெறுமதியான மென்பொருள்களை வெகுமதிகளாக வழங்குவதுண்டு. அந்த வகையில் எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு WinX DVD Author எனப்படும் 6300 இலங்கை ரூபா மதிப்புடைய மென்பொருளை இலவசமாக வழங்குகின்றது.

WinX DVD Author


உங்களது Camera அல்லது Mobile Phone மூலம் அல்லது வேறு சாதனங்கள் மூலம் பிடிக்கப்பட்ட வீடியோ அல்லது You Tube மூலம் தரவிறக்கிய வீடியோ க்கள் அல்லது வேறு வகையிலான எந்த ஒரு வீடியோ வகையினையும் இந்த மென்பொருள் மூலம் இலகுவாகவும் வேகமாகவும் மெருகூட்டி DVD போன்ற இறுவட்டுக்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பும் காணொளிகளை மெருகூட்டி DVD க்களில் பதிந்து அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம்.
அல்லது உங்களிருவர்களின் Image களுக்கு இந்த மென்பொருள் மூலம் அழகிய விளைவுகளை உருவாக்கி உங்களிருவருக்கு மத்தியில் அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.
இது போன்ற பலவற்றையும் நோக்காகக் கொண்டு Digiarty Software ஆல் வெகுமதியாக வழங்கப்படும் இந்த மென்பொருளை 2013 February 17 ஆம் திகதி வரை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளமுடியும்.

WinX DVD Author Full Version
 
இதனை தரவிறக்க கீழுள்ள Giveaway Page இற்கு சென்று Get Full Version எனும் Button  ஐ சுட்ட வரும் சாளரத்தில் "Download WinX DVD Author Full Version" என்பதனை சுட்டுவதன் மூலம் இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.




Love to hear what you think!

3 comments:

 
Top