ஆரம்பத்தில் கணனியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மென்பொருட்கள் தற்போது இணைய மேடைக்கு வர துவங்கியிருப்பதால். கணனியில் மென்பொருட்களை நிறுவும் சிரமத்தை தவிர்த்து நேரடியாக இணையமூடாகவே குறிப்பிட்ட பயனை பெற முடிகின்றது.


ஆவணங்களை நிர்வகிக்க இணையதளம்அந்த வகையில் CometDocs எனும் இந்த இணையதளத்தின் ஊடாக எமது ஆவணங்களை  ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மிக இலகுவாக மாற்றிக்கொள்ள முடிவதுடன் கோப்புக்கள் ஆவணங்களை செய்தி ஒன்றுடன் இணைத்து இன்னும் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.CometDocs தளத்தின் மூலம் PDF ஆவணங்களை Word, Excel, Powerpoin, Text, உட்பட 10 இற்கும் மேற்பட்ட வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் எந்த ஒரு ஆவணத்தையும் PDF வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளவும் முடிகின்றது.
இந்த தளத்தில் எவ்வித கணக்குகளையும் துவங்காமல் இலவசமாக ஆவணங்களை ஒருவடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மாற்றி அதனை எமது மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக் கொள்ள முடிவதுடன் கோப்புக்கள் ஆவணங்களை இன்னும் ஒருவரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப முடியும்.

எனினும் எமது ஆவணங்களை இந்த தளத்தில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கவும் சேமிக்கப்பட்ட ஆவணங்களை நேரடியாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளத்தில் இலவச கணக்கு ஒன்றை உருவாக்க வேண்டும்.

மேலும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ள விண்டோஸ் கணினிகளுக்கான மென்பொருள் மூலமும் ஆவணங்களை ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும்.


விண்டோஸ் கணினி உடன் PDF மென்பொருள்


இந்த மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவிய பின் PDF அல்லாத ஏனைய ஆவணகளை Right Click செய்வதன் மூலம் அவற்றினை PDF வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் PDF ஆவணங்களை Right Click செய்வதன் மூலம் அவற்றை Word, Exel, PowerPoint போன்ற ஏனைய ஆவண வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். எனினும் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் பயன்படுத்த குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் கணக்கொன்றை ஆரம்பித்து இருக்க வேண்டும் என்பதுடன் இணையமும் தொடர்பு படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
நீங்களும் குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


Love to hear what you think!

1 comments:

 
Top