இணையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு தளங்கள் உருவாகி வருகின்றது, விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறுகள், கட்டுரைகள் என பல பிரிவுகளில் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அந்தவகையில் சில தளங்கள் சிறுவர்களை நோக்காகக்கொண்டு உருவாக்கப்படுகின்றது.

இணையம் மூலமான விளையாட்டுக்கள்


இவைகள் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பல வகையிலும் உதவுகின்றமை பாராட்டத்தக்க விடயமே.


அந்த வகையில் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் சில தளங்களை +Tamilinfotech  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.


Aplusclick

சிறுவர்களுக்கான விளையாட்டு

இது சிறுவர்களின் கணித மற்றும் தர்க ரீதியான திறனை விருத்தி செய்வதற்காக Arithmetic, Algebra, Geometry, Analysis, Logic, Applied, Exit Exam, Everyday,
 Olympiad, Funny, Sport Math, iPad eBooks எனும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாட வகைகளை கொண்டுள்ளது. மேலும் தரம் 1 தொடக்கம் தரம் 12 வரையான குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு ஏற்ற பாட வகைகளை கொண்டுள்ளதுடன் சிறுவர்களின் ஆங்கில அறிவு விருத்திக்கும் இது பெரிதும் உதவுகின்றது.


 Funbrain

math game for kids

இந்த தளமும் சிறுவர்களின் அறிவு விருத்திக்காக பல சுவாரஷ்யமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சிறுவர்களின் அறிவு, திறன் விருத்திக்கான அருமையான விளையாட்டுக்களை கொண்டு இந்த தளம் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Smartygames 

online games for kids

இது முற்றிலும் பல நுட்பமான விளையாட்டுக்களை கொண்டிருக்கின்றது. சிறார்களின் கல்வி விருத்திக்கு ஏற்ற வகையில் Math, Money, Time, Reading, Counting, Sudoku, Memory, Puzzles, எனும் பிரிவுகளின் கீழ் சுவையான பல விளையாட்டுக்களை வழங்குவதுடன், Did you know? என்பதன் மூலம் நாம் அறிந்திராத பல விடயங்களை அறியத்தருகின்றது.Word Games

மேலும் wordgames எனும் தளமானது உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் அளிக்கும் வகையில் பல ஏராளமான விளையாட்டுக்களை தருகின்றது.

Word Games


உங்கள் அறிவுக்கு சவால்விடும் வகையில் பல நுட்பமான விளையாட்டுக்களை கொண்டுள்ள இந்த தளத்தில் இருக்கும் அனைத்து விளையாட்டுக்களும் செற்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பல நூற்றுக் கணக்கான விளையாட்டுக்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இந்த தளத்தில் நாம் விளையாடக்கூடிய ஒவ்வொரு விளையாட்டும் எதோ ஒருவகையில் இன்பத்தை அளிக்கக் கூடியதாகவே அமைந்துள்ளது.

இந்த தளத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதற்காக இதில் எவ்வித கணக்குகளையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் அத்தனை  விளையாட்டுக்களையும் இணையத்தில் இருந்தவாரே விளையாடி மகிழலாம்.ஒவ்வொரு விளையாட்டும் பார்பதற்கு அழகிய காட்சியமைப்புக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளமானது ஆசிரியர் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Word Games

Love to hear what you think!

1 comments:

 
Top