Microsoft செய்ய மறந்ததை செய்யும் TeraCopy

பெரும்பாலான விடயங்களை மேற்கொள்ள Windows இலேயே  வசதியிருந்தாலும் சில வேளைகளில் அதில் பல குறைபாடுகளை காணமுடிகின்றது. இது போன்ற சந்தர்பங்களில் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நாம் மூன்றாம் நபர் Program களை நாடுவதுண்டு. அந்த வகையில் Wndows xp தொடக்கம் Windows 8  வரையில் தரவுகளை பரிமாற்றும் செய்நிரலில் சுட்டிக்காட்டும் அளவுக்கு பெரிய வசதிகள் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக சில குறைபாடுகளை இன்னும் அவதானிக்க முடிகின்றது.

தரவுப்பரிமாற்றி


என்றாலும் Tera Copy எனும் மூன்றாம் நபர் செய்நிரல் மூலம் Windows இல் இருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்து தரவுகளை பரிமாற்றும் வேகத்தினை அதிகரித்துக்கொள்ள முடிவதுடன் மேலும் பல வசதிகளை பெற முடிகின்றது.

Tera Copy மூலம் தரவுகளை Copy Past செய்யும் போது....

  • தரவுகளில் Copy செய்ய முடியாதவைகளை Skip செய்யும் வசதி உண்டு
  • தரவுகளை Copy Past செய்யும் போது அவற்றினை இடையில் நிறுத்தி மீண்டும் ஆரம்பிக்கும் வசதி உண்டு.
  • தரவு பரிமாற்றம் நிறைவடைந்தவுடன் ஒரு ஒலியை எழுப்ப செய்ய முடிவதுடன் கணணியை தானாக Shutdown செய்யும் வசதியும் உண்டு.
ஆனால் இந்த வசதிகள் Windows தரும் செய்நிரலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Windows Xp, Windows Vista, Windows 7, Windows 8 போன்றவைகளில் சிறப்பாக இயங்குவதுடன் வெறும் 2.77MB அளவினையே கொண்டுள்ளது.

மேலும் பல வசதிகளுடன் இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.


நாம் இங்கு பகிராத மேலதிக பல சுவையான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கின்றோம். தொடர்ந்தும் எமது சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.




Love to hear what you think!

2 comments:

  1. /// தரவுகளை Copy Paste செய்யும் போது அவற்றினை இடையில் நிறுத்தி மீண்டும் ஆரம்பிக்கும் வசதி உண்டு. ///

    இது தான் இன்றைய நிலைமைக்கு (மின் வெட்டு) மிகவும் பயன் தருகிறது...

    பதிலளிநீக்கு

 
Top