அறிவியல் வளர்ச்சியின் சாதனைகளில் ஒன்றான +தகவல் தொழிநுட்பம் இன்று பல புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றது. நேற்றிருந்தது இன்றில்லை இன்றிருப்பது நாளை இருக்காது என்பதைப்போல், தினம் தினம் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய பல சாதனைகள் நிலைநாட்டப்பட்டு வருகின்றன.

 Nokia Lumia EOS Smartphone


Nokia Lumia EOS கைப்பேசி

அந்த வகையில் Mobile Phone சந்தையானது பாரியளவில் வளர்ச்சிகண்டு வருகின்றது. அண்மையில் Firefox கூட தனது பாணியில் Mobile Phone ஐ தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் Nokia நிறுவனம் PureView எனப்படும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தனது முதல் Smartphone ஐ இந்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த Nokia Lumia EOS Smartphone ஆனது 38MP திறன் கொண்ட Camera உடன் முற்று முழுதாக அலுமினியத்தினாலான Casing ஐ கொண்டு தயாரிக்கப்படுகின்றது. என்றாலும் இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்பட்வில்லை.

 Samsung Galaxy S4

Samsung Galaxy S4 கைப்பேசி


 ஒருதடவை Smart Phone உலகையே உலுக்கி எடுத்த Samsung ஆனது அதன் புதிய Mobile Phone ஆன Samsung Galaxy S4 இனை எதிர்வரும் April மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. கருப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் வர இருப்பதுடன் Wireless charger க்கு ஆதரவளிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றது.
 மேலும் இது HD 4.99 அங்குல Super AMOLED திரையுடன்  Samsung இன் புதிய 8 core Exynos 5 Octa எனும் processor மற்றும் 2GB RAM உடன் 2 megapixel முன்பக்க Camera மற்றும் 13 megapixel திறன் கொண்ட பிரதான camera ஐ கொண்டுள்ளது. இது தொடர்பில் வேறு தகவல்கள் இது வரை இல்லையெனினும் 16GB, 32GB மற்றும் 64GB உள்ளக நினைவகங்களோடுவெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


தொடர்ந்தும் புதிய மாற்றங்கள் எண்ணக்கருக்கள் ஆகியவற்றுடன் இணைந்தவாறு புதுமைகள் செய்யவுள்ளோம். தொடர்ந்தும் இணைப்பிலிருங்கள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top