அன்றாடம் கணினியை பயன்படுத்தும் நாம் கணினி மூலம் எண்ணற்ற கருமங்களை மேட்கொள்கின்றோம். அந்த வகையில் நாம் சில கருமங்களை கணினி மூலம் செய்கையில் குறிப்பிட்ட அந்த செயற்பாட்டை முடிக்க சில செக்கன்கள், அல்லது சில நிமிடங்கள் அல்லது சில மணித்தியாலங்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக  ஒரு கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு Copy, Past  செய்யும் போது கோப்பின் அளவை அல்லது அதன் வகையை பொறுத்து (.jpeg, .wmv, .exe) அதனை Past செய்வதற்கான நேரத்தை கணினி எடுத்துக்கொள்ளும். இது போன்ற இன்னும் பல சந்தர்பங்களில் கணணி குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்கும் வரை நாம் கணினி முன் காத்திருக்க வேண்டி இருப்பதுண்டு.


Wise Auto Shutdown screen shot

இது போன்ற சந்தர்பங்களில் கணினி குறிப்பிட்ட செயற்பாட்டை செய்து முடித்த பின் தானியக்க முறையில் Shutdown ஆகும் படி செய்து விட்டால் நாம் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டிய நேரத்தை மீதப்படுத்தலாம். இதற்காக உதவுகின்றது "Wise Auto Shutdown" எனப்படும் மென்பொருள்.

இந்த Wise Auto Shutdown மென்பொருள் மூலம் Shutdown செய்வது மட்டுமின்றி Restart, Log off, Hibernate, Power off, Sleep போன்ற செயற்பாடுகளை மிக இலகுவில் மேட்கொள்ளலாம்.

மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் இடைமுகம் காரணமாக இந்த மென்பொருளை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடியதாயுள்ளது.

இதில் இருக்கும் "Select a task" என்பதன் மூலம் Shutdown, Restart, Log off, Hibernate, Power off, Sleep போன்ற செயற்பாடுகளில் உங்களுக்கு எந்த செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமோ அந்த செயற்பாட்டை தெரிவு செய்யலாம்.

  • Time என்பதற்கு கீழிருக்கும் Daily என்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெற வேண்டிய செயற்பாட்டினை (Shutdown, Restart, Log off, Hibernate, Power off, Sleep) அமைத்திடலாம். 
  •  Time என்பதற்கு கீழிருக்கும் Specified time என்பதன் மூலம் குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறவேண்டிய செயற்பாட்டினை (Shutdown, Restart, Log off, Hibernate, Power off, Sleep) அமைத்திடலாம். 
  • மேலும் Time என்பதற்கு கீழிருக்கும் From now என்பதன் மூலம் நாம் அமைத்திடும் நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் குறிப்பிட்ட செயற்பாட்டை செய்யவேண்டும் என்பதனை அமைத்திடலாம்.

அத்துடன் கணணி குறிப்பிட்ட செயற்பாட்டினை மேட்கொள்ளுவதட்கு  5 நிமிடங்களுக்கு முன்னதாக எமக்கு ஞாபகம் ஊட்டுமாரும் அமைத்திடலாம். 

1.15 Mb மாத்திரமே உடைய இந்த மென்பொருளை தரவிறக்குவது இலகு என்பதுடன் எவ்வித நிபந்தனையும் இன்றி ஆயுட்காலம் முழுவதும் இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.


கீழுள்ள இணைப்பினை சுட்டிய பின் இந்த மென்பொருள் தானாகவே தரவிறக்கப்படும். இதனை சுட்டும் போது திறக்கப்படும் புதிய இணையப் பக்கத்தில் நீங்கள் எதனையும் சுட்ட வேண்டிய அவசியம் இல்லை.Shutdown  தொடர்பான எமது முன்னைய பதிவு : Fast Shutdown எனப்படக்கூடிய மிகவும் ஒரு சிறிய மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top