வேகமான தொழில்நுட்ப மாற்றத்தில் இணையமானது ஒரு பெரும் பங்கை வகிக்கின்றது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருகாலத்தில் கணனியில் மட்டுமே பயன்படுத்த முடிந்த மென்பொருட்களையெல்லாம் இன்று இணையத்தில் பயன்படுத்த முடிகின்றதென்றால் அது இணையத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியேயாகும்.

mega online storage


மேலும் மென்பொருட்கள் மட்டுமல்லாது கணணி சேமிப்பகங்களும் உருமாறி இணைய மேடைக்கு செல்லத்துவங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாளாந்தம் பல புதுப் புது விடயங்களை உள்வாங்கிக்கொள்ளும் இணையத்தில் இணைய சேமிப்பகம் என்பது வெகுவாக வளர்ச்சி கண்டு வருகிறது.

அந்த வகையில் போட்டி போட்டுக்கொண்டு இணைய சேமிப்பக சேவையினை வழங்கும் பல நிறுவனங்களோடு எதிபாராத வரவேற்பை பெற்றுகொண்டு "Mega" எனும் ஒரு புதிய இணைய சேமிப்பக சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது அண்மையில் FBI இனால் முடக்கப்பட்ட Megaupload இன் உரிமையாளர் Kim Dotcom ஆல் சென்ற ஞாயிற்றுக்கிழமை (January 20, 2013) ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இது ஆரம்பிக்கப்பட்டு வெறும் 1 மணித்தியாலத்துக்குள் 100,000 பயனர் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு மில்லியன் பயனாளர்களை உள்வாங்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mega இணைய சேமிப்பகத்தில் ஒவ்வொரு பயனாலருக்கும் 50GB இடத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் மேலும் தேவைப்படும்விடத்து மாதம் $13 செலுத்துவதன் மூலம் 500GB இடத்தையும், மாதம் $40 செலுத்துவதன் மூலம் 1TB இடத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.


இணைய சேமிப்பகம் தொடர்பான எமது முன்னைய இடுகைகள் : இணைய சேமிப்பகம்

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top