Portable மென்பொருட்களை கணனியில் நிறுவவேண்டிய(install) அவசியமில்லை,

 மாறாக அதனை Double Click செய்வதன் மூலம்குறிப்பிட்ட மென்பொருளை நேரடியாக பயன்படுத்தலாம். எனவேநாம்அடிக்கடிபயன்படுத்தும்மென்பொருட்களினது Portableபதிப்பைஎமது USB drive இனுள் இட்டுக்கொள்ளவதன் மூலம் எந்த ஒரு கண்ணியிலும் எமக்குத் தேவையான மென்பொருளை நேரடியாக திறந்து பயன்படுத்தலாம்.

codysafe add program



இதற்கும் மேலாக CodySafe எனும் மென்பொருளை எமது USB drive இனுள் நிறுவிக்கொள்வதன் மூலம் USB drive இல் இருக்கக்கூடிய Portable மென்பொருட்கள் உட்பட ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோ என அணைத்து வகையான கோப்புக்களையும் Windows Task Bar மூலம் இயக்கலாம்.

Usb drive menu


அது மட்டுமல்லாது பல்வேறு வசதிகளை இந்த மென்பொருள் தருகின்றது.
இதிலிருக்கும் Driver Doctor எனும் வசதி மூலம் உங்களது USB drive இன் திறனை பேணி பாதுகாக்க முடியும். முக்கியமாக USB drive இல் இலகுவில் தொற்றிக்கொள்ளும் Autorun Virus ஐ கண்டறிந்து அதிலிருந்தும் பாதுகாக்கின்றது.


எமது USB drive ஐ நாம் தொலைத்து விடும் சந்தர்பத்தில் அதனை கண்டெடுப்பவர் குறிப்பட்ட USB drive இன் உரிமையாளர் யார் என்பதை அறிந்து மீள ஒப்படைப்பதற்கு ஏற்ற வகையில் குறிப்பொன்றை இட்டு வைக்கும் வசதி இதில் உண்டு.இதனை தமிழ் ஆங்கிலம் உட்பட மேலும் பல மொழிகளில் பயன்படுத்த முடிவதுடன் Windows Task bar இல் நிறுவப்படும் Program ஊடாக USB Drive இல் பயன்படுத்தப்ப(ட்டுள்ள)டாமல் உள்ள இட அளவினையும் கண்கானித்துக்கொள்ளலாம்

codysafe english

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எளிமையான இடைமுகம் மற்றும் பயன்படுத்தக் கூடியவர்களை கவரும் வகையிலான ஒலி வடிவங்கள் என்பன இம்மென்பொருளை மேலும் பயன்படுத்த தூண்டுகின்றது.

இதனை USB drive இல் பயன்படுத்துவதற்கு, இம்மென்பொருளை தரவிறக்கி அதனை Double-Click செய்தவுடன் கிடைக்கும் சாளரத்தில் உங்கள் USB drive இன் ஆங்கில எழுத்தை தெரிவு செய்வதன் மூலம் இதனை உங்கள் USB Drive இல் நிறுவிக்கொள்ளுங்கள்.

codysafe install wizard

பின் USB drive இனுள் சென்று "StartCodySafe" எனும் Application ஐ Double-Click செய்யுங்கள் அவ்வளவுதான் இனி அது உங்கள் Task Bar இல் வந்து அமர்ந்து கொள்ளும். பின் உங்களுக்கு தேவையான விதத்தில் அமைப்புக்களை மாற்றி பயன்படுத்தலாம்.


நீங்கள் மொழியை மாற்ற வேண்டுமெனின் Task Bar இல் இருக்கும் CodySaf icon ஐ  Click செய்து தேர்வுகள் (Option) மூலம் மொழியை மாற்றலாம்.
இதன் Start Menu போன்ற இடைமுகத்திலிருந்து Portable Application களை துவக்க Task Bar இல் இருக்கும் CodySaf icon ஐ  Click செய்து தேர்வுகள் (Option) என்பதனை சுட்ட வரும் சாளரத்தில் Application Manager ஐ திறந்து Add Application எனும் தலைப்பின் கீழ் இருக்கும் Browse Button ஊடாக உங்களுக்கு தேவையான Portable Application களை CodySaf Menu இல் இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் Browse செய்து Add செய்யும் Portable Application USB Drive இல் இருப்பதாக இருத்தல் வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம்
இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுங்கள்.


இங்கு எழுதப்படும் அணைத்து பதிவுகளும் எமது நேரத்தினை தியாகம் செய்து எமது சொந்த முயற்சியால், சொந்த கருத்துக்களை கொண்டு பதிவிடுகிறோம். என்றாலும் குறைந்தது எமது தளத்தின் முகவரியாவது இன்றி இங்குள்ள பதிவுகளை பலர் தமது தளங்களில் Copy, Past செய்திருப்பதனை அவதானித்தோம். இவ்வாறு செய்பவர்களை தயவு செய்து இது போன்ற அநாகரீகமான செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு எமது பதிவை நீங்கள் பதிவிடுவதாயின் ஓரிரு வரிகளை மட்டும் copy செய்து விட்டு "மீதத்தை வாசிக்க" "மேலும் வசிக்க" அல்லது "மேலதிக தகவலுக்கு" என்று எமது Blog இன் URL ஐ கெடுக்கவும். கோப்பி அடிப்பது சட்டப்படி குற்றமாகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top