இன்றைய காலத்தில் கணணி இணையம் என்பது அனைவரது வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒரு தேவையாகிவிட்டது. பலரும் பல்வேறு நோக்கத்தில் கணணி, இணையத்தை பயன்படுத்துகின்றனர். எனவே இணையத்தை பயன்படுத்துகையில் இன்றியமையாத ஒரு தேவையாக அமைவது தான்   E-Mail ஆகும் .

how to two step verification in gmail


நாம் எந்த ஒரு தளத்திலும் சரி ஒரு கணக்கை ஆரம்பிக்கும் போது முக்கியமாக கேட்கப்படுவது E-Mail ID ஆகும். உதாரணமாக  Facebook  இல் ஒரு கணக்கை ஆரம்பிப்பதாயின் எமது பெயருக்கு அடுத்தபடியாக கேட்கப்படுவது E-Mail ID ஆகும்.

மேலும் கருத்துக்கள்,ஆவணங்கள், புகைப்படங்களை நண்பர்கள் உறவினர்களுக்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கும், இணையத்தில் கொடுக்கல் வாங்களை மேற்கொள்வதற்கும், நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்பை பேணுவதற்கும், வேறு ஒரு தளத்தில் இருக்கும் எமது கணக்கின் Pass Word மறந்து விடும் சந்தர்பத்தில் அதனை மீட்டுக்கொள்வதற்கும் மேலும் இது போன்ற எண்ணற்ற தேவைகளை பாதுகாப்பாக நிறைவேற்றிக்கொள்ள E-Mail என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது.


எனவே இந்த E-mail கணக்கினை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது. இதற்காக G-Mail கணக்கின் பாதுகாப்பை வலுவூட்டிக்கொள்ள 2 Step Verification எனும் வசதியினை G-Mail தருகின்றது.ஒரு வேலை G-Mail கணக்கின் Pass Word மறந்து விடும் சந்தர்பத்தில் அதனை மீட்டுக்கொள்வதற்கும் இது உதவியாக இருக்கும்.

gmail 2 step verification

இந்த 2 Step Verification எனும் வசதியினை எமது G-Mail கணக்கில் எவ்வாறு செயடற்படுத்திக்கொள்ள முடியும் என்பதனை எனது நண்பர் கீழுள்ள Video இணைப்பில் செய்துகாட்டியுள்ளார்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top