Cloud storage என்பது இன்று அணைவராலும் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது. Cloud storage சேவையின் கேள்வியை அறிந்து இதனை பல நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் கணணி பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு சேவைகளை வழங்கும் முன்னனி நிறுவனமான Symentec, "Norton Zone" Cloud storage சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Norton Cloud Storage


இது Dropbox இன் Cloud storage சேவையினை போன்றது. இதில் கோப்புக்களை இணைய உலாவி மூலம் தரவேற்றம் செய்யமுடிவதுடன். 100 Mb மேற்பட்ட கோப்புக்களை தரவேற்றுவதற்கென Desktop Client எனும் மென்பொருள் தரப்படுகின்றது.
அத்துடன் Dropbox  இல் போன்றே Norton Zone எனும் ஒரு Folder உருவாகிவிடும் இதன் மூலம் எமது கோப்புக்களை Norton Zone Folder மூலம் எளிதாக கையாள முடியும்.

Symantec Norton Zone folder
அத்துடன் நீங்கள் தரவேற்றும் கோப்புக்கலுக்கான தரவிறக்கத்தினை வரையறை செய்ய முடியும். மேலும் கணனிக்கு நாசம் விளைவிக்கும் கோப்புக்களை Norton Zone இல் தரவேற்றம் செய்ய அனுமதிக்காமையால் Norton Zone இலிருந்து தரப்படும் இணைப்பை தரவிறக்க யாரும் தயங்க மாட்டார்கள்.

create public link norton zone

 நீங்கள் தரவேற்றும் கோப்புக்களுக்கு கருத்துக்களை இடும் வசதி தரப்படுகின்றது. Norton Zone இல் எவருக்கும் ஒரு கணக்கை துவங்கி நிருவகிக்க முடியும். கணக்கினை துவங்கும் அணைத்து இலவச பயனாளர்களுக்கும் 5GB இடம் வழங்கப்படுகின்றது.
அணைத்து வகையான சாதனங்களிலும் பயன்படுத்தும் வகையில் Windows, iPhone, மற்றும் Android போன்றவற்றிற்கு பிரத்தியோக மென்பொருள்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


உங்கள் சாதனத்துக்கு ஏற்ற மென்பொருளை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top