Vimeo எனப்படுவது ஒரு சிறந்த காணொளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய தளமென்பதுடன்  ஒரு சமூக வளை தளமுமாகும். 
இங்கு ஒவ்வொரு தனி நபருக்கும் இணைந்து கொள்ளுவதன் ஊடாக Video களை பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் இந்த தளத்தில் தரவேற்றப்படும் video உயர்தரத்தில் இருப்பதனை Vimeo வரவேற்கிறது. மேலும் இங்கு தரவேற்றக்கூடிய video க்களுக்கான அளவு வரையறை செய்யப்படவில்லை எனினும் வாரத்துக்கு 500MB வரையான video க்களினையே தரவேற்ற முடியுமாக உள்ளது. மேலும் பணம் செலுத்துவதன் ஊடாக வாரத்துக்கு 5GB வரை தரவேற்றிக்கொள்ள முடியும். 

vimeo video application



இங்கு குறிப்பிட்டுக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் தற்பொழுது  Vimeo ஆனது IPHONE களுக்கான Application இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Vimeo IPHONE Application ஊடாக Video க்களினை வேகமாக தரவேற்றக்கூடியதாகவுள்ளதுடன் Video க்களினை இலகுவாக உருவாக்குவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் வழி  வகுத்துள்ளது.


இதன் இடைமுகம் மிகவும் அழகிய முறையில் அமையப்பெற்றுள்ளதாகவும் இந்த புதிய முயற்சியானது IPHONE, IPAD பயனர்களை மகிழ்விக்கும் என்று நம்புவதாகவும் Vimeo கூறுகிறது. மேலும் இதன் சிறப்பம்சங்களை Vimeo பட்டியலிட்டுக்கொண்டே செல்கின்றது. பதிவின் நீளத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அதை இங்கு தவிர்க்கிறேன்.



 இந்த Vimeo IPHONE Application இலவசமானதாகும் நீங்கள் IPHONE USER ஆயின் இதனை பின்வரும் முகவரியிலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

Free Download Vimeo IPHONE Application 

உடனுக்குடன் எனது தகவல்களை அறிய எமது facebook page இல் இணைந்திருங்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top